நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் கபில் மொரேஸ்வர் பாடில் இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
உணவு மற்றும் பொதுவிநியோகத்துறையின், பொது விநியோக முறை சீர்திருத்தங்கள், உணவு தானிய விநியோகத்தில் திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், போலி ரேஷன் அட்டைகளை அகற்றவும், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பொது விநியோக திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும், ரேஷன் அட்டை மற்றும் பயனாளிகளின் விவரங்கள் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. வெளிப்படையான இணையதளம் மற்றும் ஆன்லைன் குறைதீர்ப்பு வசதிகள் மற்றும் இலவச தொலைபேசி எண்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும்,ரேஷன் கடைகளில் மின்னணு விற்பனை இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பயனாளிகளிக்கு ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் வெளிப்படையான முறையில் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தற்போது, நாட்டில் மொத்தம் உள்ள 5.33 லட்சம் ரேஷன் கடைகளில். 5.07 லட்சம் ரேஷன் கடைகளில்(95சதவீதம்) மின்னணு விற்பனை இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் செயல்பாட்டை சீரமைக்கவும், அதை அதிக வெளிப்படை தன்மையுடையாக மாற்றவும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மின்னணு-பஞ்சாயத்து திட்டத்தை அமல்படுத்துகிறது. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் செயல்பாடுகளை எளிமையாக்க மின்னணு கிராம ஸ்வராஜ் திட்டத்தை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
–திவாஹர்