வந்தே பாரதம் இறுதிப் போட்டி 19 டிசம்பர் அன்று புதுதில்லியில் நடைபெற உள்ளது.

73 groups comprising 949 dancers from North, South, East, West zones have made it to the Grand Finale of ‘Vande Bharatam-Nritya Utsav’, an All-India dance competition being organized under Azadi ka Amrit Mahotsav. The Final will be held in New Delhi at the Jawaharlal Nehru Stadium Auditorium on 19th of December. The Ministry of Defence and the Ministry of Culture had announced the launch of ‘Vande Bharatam-Nritya Utsav’, as part of Azadi Ka Amrit Mahotsav to commemorate 75 years of independence of India. It is a unique initiative based on jan bhagidari whose prime objective is to select the top dancing talent from across the country and provide them the opportunity to perform during the Republic Day Parade 2022.

In the Grand Finale, the dancers will vie for the grand honor and a once-in-a-lifetime opportunity to display their talent at the Republic Day Parade which is watched not only in India, but across the globe.

Over 2,400 participants from 200 plus teams were short-listed for the zonal level competitions. where 104 groups displayed their dance prowess before an august jury. Participating groups performed specially choreographed acts in various dance categories like classical, folk, tribal, and fusion. One experienced rich display of talent and colourful attires from across India. There was enthusiastic participation from all sections of the society across categories highlighting the spirit of Ek Bharat Shrestha Bharat.

Top 480 dancers will be declared as winners from the Grand Finale and they will get the golden opportunity to perform on the Republic Day Parade to be held at Rajpath, New Delhi on 26th January 2022.

The Vande Bharatam competition began at the district level on Nov 17 and saw the participation of more than 3,870 contestants in 323 groups. Those who cleared the screening at the district level took part in the state-level competition from Nov 30, 2021. More than 20 virtual events were conducted for the state-level competition over a span of 5 days till 4th December 2021.

Over 300 groups were selected for the state-level comprising over 3,000 dancers/participants. Thus, for one month, the event allowed all aspirants to showcase their talent to win a slot at the National level.

The Grand Finale competition can be seen LIVE on the official Facebook page & YouTube channel of Vande Bharatam along with the website (vandebharatamnrityautsav.in) and mobile application.

xxxxxxxxxxxx

சுதந்திரப் பெருவிழா கொண்டாட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட அகில இந்திய நடனப் போட்டியான ‘வந்தே பாரதம் – நிர்த்ய உத்சவ்‘ (‘Vande Bharatam-Nritya Utsav’) இறுதிப் போட்டிக்கு, நாட்டில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மண்டலங்களைச் சேர்ந்த 949 நடனக் கலைஞர்கள் அடங்கிய 73 குழுக்கள் தகுதிப் பெற்றுள்ளன. இறுதிப் போட்டி டிசம்பர் 19 அன்று புதுதில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்க கலையரங்கில் நடைபெற உள்ளது. இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை நினைவு கூறும் விதமாக சுதந்திரப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு அமைச்சகமும். கலாச்சார அமைச்சகமும் இணைந்து ‘வந்தே பாரதம் – நிர்த்ய உத்சவ்‘ நடத்தப்படும் என அறிவித்திருந்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தலைசிறந்த நடனக் கலைஞர்களை தேர்வு செய்து, 2022 ஆம் ஆண்டு குடியரசு தின அணி வகுப்பில் கலை நிகழ்ச்சி நடத்தும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கும் விதமாக, ஜன் பாகிதாரி அடிப்படையிலான இந்த தனித்துவமான முன்முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறுதிப் போட்டியில், நடனக் கலைஞர்களுக்கு பெரும் கவுரவம் காத்திருப்பதோடு, வாழ்நாளில் ஒரு அரிய வாய்ப்பாக, இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் காணப்படும் குடியரசு தின அணிவகுப்பில் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

மண்டல அளவிலான போட்டிகளுக்கு 200-க்கும் மேற்பட்ட குழுக்களிலிருந்து 2400-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் 104 குழுவினர் தங்களது நடனத் திறமையை நடுவர் குழு முன்பாக வெளிப்படுத்தினர். பாரம்பரிய நடனம், நாட்டுப்புற, பழங்குடியின மற்றும் கலவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட நடனங்களை ஆடினர். இந்தியா முழுவதிலுமிருந்து வண்ணமயமான உடையணிந்து வந்தவர்கள் தங்களது தனிச் சிறப்புமிக்க திறமையை வெளிப்படுத்தியதை காண முடிந்தது. சமுதாயத்தின் அனைத்துத் தரப்பையும் சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் உற்சாகத்துடன் பங்கேற்று, ஒன்றுபட்ட பாரதம், வலிமையான பாரதம் என்பதை எடுத்துரைத்தனர்.

நவம்பர் 17 தொடங்கிய மாவட்ட அளவிலான வந்தே பாரதம் போட்டியில் 323 குழுக்களைச் சேர்ந்த 3870-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவிலான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நவம்பர் 30, 2021 அன்று நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். 4 டிசம்பர் 2021 வரை 5 நாட்களுக்கு நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டியையொட்டி 20-க்கும் மேற்பட்ட காணொலி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

3000 நடனக் கலைஞர்கள் / போட்டியாளர்களிலிருந்து மாநில அளவிலான போட்டிக்கு 300-க்கும் மேற்பட்ட குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. ஒரு மாத காலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, விருப்பமுள்ள அனைவரும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க ஏதுவாக தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்தது.

இறுதிப் போட்டியை வந்தே பாரதம் அதிகாரபூர்வ முகநூல் பக்கம் மற்றும் யூ டியூப் அலைவரிசையிலும், வலைதளம் (vandebharatamnrityautsav.in) மற்றும் செல்போன் செயலியில் நேரலையாக காணலாம்.

திவாஹர்

Leave a Reply