The Prime Minister, Shri Narendra Modi laid the foundation stone of ‘Banas Dairy Sankul’ at the UP State Industrial Development Authority Food Park, Karkhiyaon, Varanasi. Spread across 30 acres of land, the Dairy will be built at a cost of about Rs 475 crores and will have a facility for processing 5 lakh litre of milk per day. The Prime Minister also digitally transferred about Rs 35 crore bonus to the bank accounts of more than 1.7 lakh milk producers associated with Banas Dairy. The Prime Minister also laid the foundation stone for the Biogas based Electricity generation plant for the Milk Producers Cooperative Union Plant, Ramnagar, Varanasi. The Prime Minister launched a Portal and Logo dedicated to the Conformity Assessment Scheme of milk products, developed by the Bureau of Indian Standards (BIS) with the help of National Dairy Development Board (NDDB).
In another effort to reduce the land ownership issues at grassroot level, the Prime Minister virtually distributed the rural residential rights record ‘Gharauni’ under the Swamitva scheme of the Union Ministry of Panchayati Raj, to over 20 Lakh residents of Uttar Pradesh.
The programme also witnessed the Prime Minister inaugurating and laying the foundation stone of developmental projects worth over Rs. 1500 crores in Varanasi. This will further strengthen the ongoing 360 degree transformation of Varanasi.
Chief Minister, Uttar Pradesh, Shri Yogi Adityanath and Union Minister Dr Mahendra Nath Pandey were among those present on the occasion.
Addressing the gathering, the Prime Minister paid tribute to former Prime Minister Chaudhary Charan Singh on his birth anniversary, which is celebrated as Kisan Diwas.
The Prime Minister underlined the importance of livestock. He said “talking about cows can be a crime for some people, cows are revered as mothers by us. People who make fun of cow-buffalo forget that the livelihood of 8 crore families of the country is run by such livestock.” He added “strengthening India’s dairy sector is one of the top priorities of our government. In this series, the foundation stone of Banas Kashi Sankul has been laid here today.” He also talked about the nationwide immunisation programme for foot and mouth disease among cattles. The milk production in the country has increased by about 45 percent as compared to 6-7 years ago. Today India produces about 22 percent of the world’s milk. “I am happy that today UP is not only the largest milk producing state in the country, it is also significantly ahead in the expansion of the dairy sector”, the Prime Minister said.
The Prime Minister expressed his firm belief in the role of the dairy sector, animal husbandry and the new push in white revolution in transforming the lives of farmers. Firstly, he said, animal husbandry can become a huge source of additional income for the small farmers of the country, whose number is more than 100 million. Secondly, India’s dairy products have a huge market abroad, in which there is a lot of potential to grow. Thirdly, said the Prime Minister, animal husbandry is a great way for the economic upliftment of women, to further their entrepreneurship. The fourth is that livestock is also a big basis for biogas, organic farming and natural farming. The Bureau of Indian Standards has issued a unified system for the country. An integrated logo featuring Kamdhenu cows has also been launched for certification. If this proof, this logo is visible, then the identification of purity will be easy and the credibility of India’s milk products will also increase, The Prime Minister emphasised.
Continuing with his emphasis on natural farming, the Prime Minister said with the passage of time, the scope of natural farming was reduced and chemical farming became dominant. “For the rejuvenation of mother earth, to protect our soil, to secure the future of the coming generations, we must once again turn to natural farming. This is the need of the hour today”, he said. The Prime Minister appealed to the farmers to adopt natural farming and organic crops. He said that this will go a long way in making our agriculture AtmaNirbhar.
The Prime Minister virtually distributed the rural residential rights record ‘Gharauni’ under the Swamitva scheme of the Union Ministry of Panchayati Raj, to over 20 Lakh residents of Uttar Pradesh. He said this will open new vistas of development and dignity for rural poor and will make them part of the development growth story.
He said Varanasi is fast turning into a model of development. New projects are bringing unprecedented ease and convenience for the people of Varanasi. He said. Projects inaugurated and started today will further strengthen the health, education and infrastructure related image.
The Prime Minister said that people who have viewed the politics of Uttar Pradesh from the prism of caste, creed, religion get upset by the talk of double power of double engine. Such people, he said, don’t consider schools, colleges, roads, water, housing for the poor, gas connections and toilets part of development. “The difference between what the people of UP got earlier and what the people of UP are getting from our government today is clear. We are enhancing the heritage of UP and we are also developing UP”, The Prime Minister concluded.
Projects in the education sector that were inaugurated by the Prime Minister include the Union Education Ministry’s Inter University Centre for Teachers Education, built at a cost of around Rs 107 crore and a Teachers Education Centre at Central Institute of Higher Tibetan Studies, built at a cost of over Rs 7 crore. Further, residential flats and staff quarters at BHU and ITI Karaundi were also inaugurated by the Prime Minister.
In the health sector, projects comprising Doctors hostel, a Nurses hostel and shelter home amounting to Rs 130 crore, at Mahamana Pandit Madan Mohan Malviya Cancer Centre were inaugurated by the Prime Minister. He inaugurated a 50 bed Integrated Ayush Hospital at Bhadrasi. He also laid the foundation of Rs 49 Cr Government Homoeopathic Medical College in tehsil Pindra under the Ayush Mission.
In the road sector, the Prime Minister laid the foundation stone of two ‘4 to 6 lane’ road widening projects for Prayagraj and Bhadohi roads. This will improve connectivity of Varanasi and will be a step towards resolving the problem of the city’s traffic congestion.
To give fillip to the tourism potential of the holy city, the Prime Minister also inaugurated the Phase-1 of Tourism Development project related to Shri Guru Ravidas Ji Temple, Seer Govardhan, Varanasi.
Other projects inaugurated by the Prime Minister include a Speed Breeding Facility at International Rice Research Institute, South Asia Regional Centre Varanasi, a Regional Reference Standards Laboratory at village Payakpur and an Advocate building at Tehsil Pindra.
xxxxxxxxxx
வாரணாசியின் கர்க்கியானில் உள்ள உத்தரப்பிரதேச அரசின் தொழில் மேம்பாட்டு ஆணையப் பூங்காவில் ‘பனாஸ் பால்வளத் தொகுப்புக்குப்’ பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார். 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இந்தப் பால்பண்ணை ரூ.475 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இது நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பாலினைப் பதப்படுத்தும் வசதி கொண்டது. பனாஸ் பால்பண்ணையோடு தொடர்புடைய 1.7 லட்சத்திற்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.35 கோடியையும் பிரதமர் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்தார். வாரணாசியின் ராம் நகரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தொழிற்சாலைக்கு சாண எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தித் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் உதவியுடன் இந்திய தர நிர்ணய குழுவால் உருவாக்கப்பட்ட இணையப் பக்கத்தை தொடங்கி வைத்த பிரதமர், பால் பொருட்களின் மதிப்பீட்டு உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அடையாள சின்னத்தை வெளியிட்டார்.
அடித்தள நிலையில் காணப்படும் நில உரிமைப் பிரச்சனைகளைக் குறைக்கும் மற்றுமொரு முயற்சியாக உத்தரப்பிரதேசத்தின் 20 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புதாரர்களுக்கு மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் உரிமைத் திட்டத்தின் கீழ் ஊரகக் குடியிருப்பு உரிமைகள் ஆவணம் கவ்ரானியை பிரதமர் இணையவழி விநியோகித்தார்.
வாரணாசியில் ரூ.870 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 22 வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார் மற்றும் தொடங்கி வைத்தார். வாரணாசியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முழுமையான மாற்றத்தை இது மேலும் வலுப்படுத்தும்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு.யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படும் முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளையொட்டி அவருக்குப் பிரதமர் புகழாரம் சூட்டினார்.
கால்நடைகளின் முக்கியத்துவத்தைப் பிரதமர் கோடிட்டுக் காட்டினார். “பசுக்கள் பற்றிய பேச்சு சிலருக்கு குற்றமாக இருக்கலாம். பசுக்கள் நம்மால் தாயாக மதிக்கப்படுகிறது. எருமைகளைப் பரிகாசம் செய்கின்றவர்கள் இத்தகைய கால்நடைப் பராமரிப்பு மூலம் நாட்டின் 8 கோடி குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது என்பதை மறந்து விடுகிறார்கள்” என்று அவர் கூறினார். “இந்தியாவின் பால்வளத்துறையை வலுப்படுத்துவது எமது அரசின் உயர் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக பனாஸ் காசி தொகுப்புக்கு இங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் கூறினார். கால்நடைகளுக்கு உருவாகும் கோமாரி நோய்த் தடுப்புத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவது பற்றியும் அவர் பேசினார். 6-7 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில் நாட்டின் பால் உற்பத்தி 45 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகின் மொத்த பால் உற்பத்தியில் 22 சதவீதம் இன்று இந்தியாவில் உற்பத்தியாகிறது. “உத்தரப்பிரதேசம் இன்று நாட்டில் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் மாநிலமாக மட்டுமின்றி பால் வளத்துறை விரிவாக்கத்திலும் கணிசமான அளவு முன்னேறி உள்ளது” என்று பிரதமர் கூறினார்.
பால் வளத்துறை, கால்நடைப் பராமரிப்பு, வெண்மைப் புரட்சிக்கான புதிய உந்துதல் ஆகியவை விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெரிய பங்கு வகிக்கிறது என்பதில் பிரதமர் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். முதலாவதாக நாட்டில் 100 மில்லியனுக்கும் அதிக எண்ணிக்கையில் உள்ள சிறு விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் அளிக்கும் மாபெரும் ஆதாரமாக கால்நடைப் பராமரிப்பு உள்ளது என்று அவர் கூறினார். இரண்டாவதாக இந்தியாவில் பால் பொருட்கள் வெளிநாட்டில் மிகப் பெரிய சந்தையைப் பெற்றுள்ளது என்றும், வளர்ச்சிக்கு ஏராளமான திறனை அது கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மூன்றாவதாக பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் அவர்களின் தொழில் முனைவை ஊக்கப்படுத்தவும், கால்நடைப் பராமரிப்பு மகத்தான வழியாகும் என்று பிரதமர் கூறினார். நான்காவதாக கால்நடை என்பது சாண எரிவாயுக்கும், ஆர்கானிக் வேளாண்மைக்கும், இயற்கை வேளாண்மைக்கும் பெரும் அடிப்படையாக உள்ளது. இந்தியத் தர நிர்ணயக் குழு நாட்டிற்கு ஒருங்கிணைக்கப்பட்ட நடைமுறையை வழங்கி உள்ளது. காமதேனு பசுக்களை கொண்ட ஒருங்கிணைந்த அடையாள சின்னத்தை சான்றிதழுக்காக அளித்துள்ளது. இந்த அடையாள சின்னம் தூய்மையை எளிதாக அடையாளம் காண உதவும். இந்தியாவில் பால் பொருட்கள் குறித்த நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும் என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.
இயற்கை வேளாண்மை குறித்த வலியுறுத்தலை தொடர்ந்த பிரதமர், காலப்போக்கில் இயற்கை வேளாண்மை மீதான நம்பிக்கைக் குறைந்து ரசாயன வேளாண்மை ஆதிக்கம் செலுத்தியது. “பூமித்தாயை புத்தாக்கம் செய்யவும் நமது மண் வளத்தைப் பாதுகாக்கவும் வருகின்ற தலைமுறைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் நாம் மீண்டும் ஒருமுறை இயற்கை வேளாண்மைக்கு திரும்பியாக வேண்டும்” என்று அவர் கூறினார். இயற்கை வேளாண்மையையும், ஆர்கானிக் பயிர்களையும் ஏற்குமாறு விவசாயிகளுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். நமது வேளாண்மையை தற்சார்புடையதாக மாற்றுவதற்கு இது சிறந்த வழியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
உத்தரப்பிரதேசத்தின் 20 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புதாரர்களுக்கு மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் உரிமைத் திட்டத்தின் கீழ் ஊரகக் குடியிருப்பு உரிமைகள் ஆவணம் கவ்ரானியை பிரதமர் இணையவழி விநியோகித்தார். ஊரக ஏழைகளுக்கு வளர்ச்சி மற்றும் கௌரவத்தின் புதிய வழிகளை இது திறக்கும் என்று கூறிய அவர், வளர்ச்சிக் கதையின் ஒரு பகுதியாக அவர்களை மாற்றும் என்றார். வளர்ச்சியின் மாதிரியாக வாரணாசி விரைந்து மாற்றம் பெறுகிறது என்று அவர் கூறினார். புதிய திட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத வசதியை வாரணாசி மக்களுக்குக் கொண்டு வருகின்றன என்று அவர் கூறினார். இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படைக் கட்டமைப்புத் தொடர்பான பிம்பத்தை மேலும் வலுப்படுத்தும்.
உத்தரப்பிரதேசத்தின் அரசியலை சாதி, சமயம், மதம் என்ற முப்பட்டைக் கண்ணாடி மூலம் பார்ப்பவர்கள் இரட்டை என்ஜின், இரட்டை ஆற்றல் என்ற பேச்சால் பிரமித்துப் போயுள்ளனர் என்று பிரதமர் கூறினார். இத்தகையவர்கள் பள்ளிகள், கல்லூரிகள், சாலைகள், குடிநீர், ஏழைகளுக்கு வீட்டுவசதி, எரிவாயு இணைப்புகள், கழிப்பறைகள் ஆகியவற்றை மேம்பாட்டின் ஒரு பகுதியாக கருதவில்லையென்று அவர் குறிப்பிட்டார். “உத்தரப்பிரதேசத்தின் மக்கள் ஏற்கனவே பெற்றதற்கும் இன்று நமது அரசின் மூலம் பெறுவதற்கும் இடையேயான வேறுபாட்டை தெளிவாக அறிவார்கள். உத்தரப்பிரதேசத்தின் பாரம்பரியத்தை நாங்கள் விரிவுபடுத்துகிறோம். அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்திற்கு வளர்ச்சியையும் செய்கிறோம்” என்று குறிப்பிட்டு பிரதமர் உரையை நிறைவு செய்தார்.
கல்வித் துறையில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களில் ரூ.107 கோடி செலவில் கட்டப்பட்ட மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆசிரியர்கள் கல்வி மையம், ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட திபெத்தியர்களின் உயர்கல்விக்கான மத்திய கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்கள் பயிற்சி மையம் ஆகியவையும் அடங்கும். மேலும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் குடியிருப்பு அடுக்ககங்கள், ஊழியர் குடியிருப்புகள் கரவ்ண்டி ஐடிஐ ஆகியவையும் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டன.
சுகாதாரத் துறையில் மகாமனா பண்டிட் மதன்மோகன் மாளவியா புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரூ.130 கோடி மதிப்பிலான மருத்துவர்கள் விடுதி, செவிலியர்கள் விடுதி, தங்கும் விடுதி ஆகியவையும் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டன. பத்ராசியில் 50 படுக்கை கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை அவர் தொடங்கி வைத்தார். ஆயுஷ் இயக்கத்தின் கீழ் பிந்த்ரா வட்டத்தில் ரூ.49 கோடி மதிப்பிலான அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
சாலைத் துறையில் பிரயாக்ராஜ் மற்றும் பதோஹி சாலைகளை 4 வழி மற்றும் 6 வழி சாலைகளாக விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது வாரணாசிக்கான போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்தும். மேலும் அந்த நகரத்தின் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை நோக்கிய ஒரு செயல்பாடாகவும் இருக்கும்.
இந்தப் புனித நகரின் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வாரணாசியில் ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி ஆலயம், கோவர்தன் தொடர்பான முதல்கட்ட சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். வாரணாசியில் உள்ள தெற்காசிய பிராந்திய மையத்தின், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தி்ல் வேகமான பயிர் வளர்ச்சி ஆய்வமைப்பு, பயாக்பூர் கிராமத்தில் மண்டல தரங்கள் ஆய்வகம், பிந்த்ரா வட்டத்தில் வழக்கறிஞர் கட்டிடம் ஆகியவையும் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட பிற திட்டங்களாகும்.
–எஸ்.சதிஸ் சர்மா