நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிரவாதி. எனவே, அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 30-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து; சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்திந்திய தலித் சமாஜ் என்ற அமைப்பின் தலைவர் வழக்கறிஞர், டாக்டர் பிரவீணா என்பவர் சென்னை திருவொற்றியூர் காவல் ஆய்வாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்டதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளரும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் வழக்கறிஞர், டாக்டர் பிரவீணாவை நாம் தொடர்பு கொண்டோம்.
சீமான் நடத்துவது கருத்து அரசியல் அல்ல!-மாறாக, வெறுப்பு அரசியலையும்; செருப்பு அரசியலையும்தான் தமிழ்நாட்டில் நடத்தி வன்முறையை தூண்டி வருகிறார்.
பொதுவெளியில் கூட்ட மேடையில் காலில் கிடந்த செருப்பை கையில் எடுத்து வன்முறையை தூண்டும் அளவிற்கு சீமான் பேசியபோது; உடனே வழக்குப் பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், தருமபுரியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்ட கூட்ட மேடையில், திமுகவினர் ஏறி சண்டையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
சீமான் செருப்பை கழட்டி காட்டிய போது மௌனமாக இருந்தவர்கள்; தருமபுரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் சண்டையிட்டதை சட்ட விரோதம் என்கிறார்கள். இது எந்த வகையில் நடுநிலை ஆகும்?
சீமான் கருத்து அரசியல் நடத்தினால்; கருத்தை கருத்தால் எதிர்கொள்ளலாம். ஆனால், திட்டமிட்டே கெட்ட நோக்கத்தோடு வெறுப்பு அரசியலையும்; செருப்பு அரசியலையும் சீமான் கையிலெடுக்கும் போது அதை எப்படி எதிர்கொள்ள முடியும்?தருமபுரியில் நடைபெற்றதை போலதான் இனி நாடு முழுக்க நடக்கும்.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று சீமான் பகிரங்கமாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தபோதே அவரை கைது செய்து இருந்தால், இன்று இவ்வளவு தூரம் வன்முறை வளர்ந்திருக்காது. ஆனால், ஏனோ தெரியவில்லை, சீமான் விசியத்தில் தமிழ்நாடு காவல்துறை இன்று வரை மௌனமாக இருந்து வருகிறது.
சீமான் இனி வெளியில் நடமாடினால் தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படும். பொது அமைதிக்கு பங்கம் உண்டாகும். அதனால் தான் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி காவல்துறையில் நான் புகார் அளித்துள்ளேன் என்றார்; அனைத்திந்திய தலித் சமாஜ் என்ற அமைப்பின் தலைவர் வழக்கறிஞர், டாக்டர் பிரவீணா.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com