குஜராத்தின் குருத்வாரா லாக்பட் சாஹிபில் குருநானக் தேவ் அவர்களின் பிறந்த நாள் விழாவில் பிரதமர் உரையாற்றினார்.

Prime Minister Shri Narendra Modi addressed Gurpurab celebrations of Guru Nanak Dev Ji at Gurudwara Lakhpat Sahib, Gujarat.
Addressing the gathering, the Prime Minister said Gurdwara Lakhpat Sahib has been a witness to every flow of time. He said he was reminded of how Lakhpat Sahib has seen upheavals in the past. He recalled that once upon a time this place was a major centre for trade to go to other countries. The Prime Minister noted that after the 2001 earthquake, he had the privilege of serving this holy place by Guru’s grace. He recalled that then artisans from different parts of the country restored the original glory of this place. He said Guruvani was inscribed on the walls here using the ancient writing style. This project was also honoured by UNESCO then.

The Prime Minister said that by the grace of great Guru Sahib’s the government got to be in a position to celebrate auspicious occasions like 350 years of Prakash Purab of Guru Gobind Singh Ji and 550 years of Prakash Purab of Guru Nanak Dev ji. In recent years, the Prime Minister said, efforts were made at every level for the message of Guru Nanak Dev ji to reach the whole world with new energy. The Kartarpur Sahib Corridor, which was awaited for decades, was completed in 2019 by the government. Currently, 400 years of Prakash Utsav of Guru Teg Bahadur ji are being celebrated.

The Prime Minister said, of late, we have been successful in bringing the ‘Swaroop’ of the revered Guru Granth Sahib from Afghanistan to India. What can be a greater experience of Guru’s grace than this, the Prime Minister exclaimed. He added that when he went to America a few months ago, America returned more than 150 historical objects to India there. He said there is also a peshkabz or small sword, on which the name of Guru Hargobind ji is written in Persian. “It is the great fortune of this government to be able to do all this”, the Prime Minister said.

The Prime Minister remarked that it has always been a matter of pride for Gujarat that the fourth Gursikh, of the Panch Pyare, Bhai Mokham Singh ji, was from Gujarat, who played an important role in the establishment of the Khalsa Panth. Gurudwara Bet Dwarka Bhai Mohkam Singh has been built in his memory in Devbhoomi Dwarka.

The Prime Minister respectfully recalled the contribution of the great Guru Tradition to Indian society in the times of subjugation and attacks by the invaders. He said Guru Nanak Dev ji came with a message of brotherhood when society was ridden with obscurantism and divisions. Similarly, Guru Arjan Dev Ji, through integrating the voice of the saints of the entire country brought a sense of unity to the nation. Guru Harkishan ji showed the path of service of humanity which still guides Sikhs and rest of humanity. The Prime Minister noted that Guru Nanak Dev ji and after him our different gurus not only kept the consciousness of India ignited, but also made a way to keep India safe. The contribution of our Gurus is not limited to society and spirituality only. Rather, if our nation, the contemplation of the nation, the faith and integrity of the nation is safe today, then at its core is the great ‘tapasya’ of the Sikh Gurus. Guru Nanak Dev Ji, said the Prime Minister, was clear in his understanding of the danger that Babar’s invasion posed for India.

Similarly Guru Teg Bahadur’s entire life is an example of ‘Nation FIrst’, the Prime Minister emphasised. The Prime Minister said just as Guru Tegh Bahadur ji always stood firm for his concern for humanity, he gives us the vision of the soul of India. The way the country gave him the title of ‘Hind ki Chadar’, shows the attachment of every Indian towards the Sikh tradition. He added that Guru Tegh Bahadur’s valor and his sacrifice against Aurangzeb teaches us how the country fights against terror and religious fanaticism. Similarly, the life of the tenth Guru, Guru Gobind Singh Sahib is also a living example of tenacity and sacrifice at every step, he said.

The Prime Minister lauded that the valour with which our Sikh brothers and sisters fought for the country’s independence even under British rule, our freedom struggle and land of Jallianwala Bagh bear witness to those sacrifices. This tradition, the Prime Minister said, is still alive and becomes all the more important in these times of ‘Amrit Mahotsav’ when we are remembering and taking inspiration from our past.

The Prime Minister said from Kashmir to Kanyakumari, from Kutch to Kohima, the whole country is dreaming together, striving for their accomplishment together. He reminded that today the mantra of the country is – Ek Bharat, Shreshtha Bharat. Today the goal of the country is – the revival of a new capable India. Today the policy of the country is – service to every poor, priority to every deprived.

The Prime Minister also requested the devotees to visit the Rann Festival of Kutch. He said transformation of Kutch bears testimony to the vision and hard work of the people of Kutch. Paying Homage to Shri Atal Bihari Vajpayee on his birth anniversary today, the Prime Minister recalled the affection of Shri Vajpayee for Kutch. “Atal ji and his government stood shoulder to shoulder in the development works done here after the earthquake” the Prime Minister remembered.

Every year from 23rd December to 25th December, Sikh Sangat of Gujarat celebrate the Gurpurab of Guru Nanak Dev Ji at Gurudwara Lakhpat Sahib. Guru Nanak Dev ji had stayed at Lakhpat during the course of his travels. Gurudwara Lakhpat Sahib has his relics including wooden footwear and palkhi (cradle) as well as manuscripts and markings scripts of Gurmukhi.

The Gurudwara had suffered damages during the 2001 earthquake. The then Gujarat Chief Minister, Shri Narendra Modi, had undertaken urgent efforts to ensure repair of the damages. This step showed the deep reverence of the Prime Minister for the faith, as also reflected in multiple recent endeavours, including the celebrations of 550th Parkash Purab of Guru Nanak Dev Ji, 350th Parkash Purab of Guru Gobind Singh Ji, and 400th Parkash Purab of Guru Tegh Bahadur ji.

குஜராத்தின் குருத்வாரா லாக்பட் சாஹிபில் குருநானக் தேவ் அவர்களின் பிறந்த நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், குருத்வாரா லாக்பட் சாஹிப் காலத்தின் ஓட்டத்திற்கு சாட்சியாக இருக்கிறது என்று பிரதமர் கூறினார். லாக்பட் சாஹிப் கடந்த காலத்தில் எழுச்சிமிக்கதாக இருந்ததை நினைத்துப் பார்ப்பதாக அவர் கூறினார். ஒரு காலத்தில் இந்த இடம், மற்ற நாடுகளுக்கு செல்வதற்கான மிகப் பெரிய வர்த்தக மையமாக இருந்தது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். 2001-ஆம் ஆண்டு நில நடுக்கத்திற்குப் பின் குருவின் கருணையால் இந்தப் புனிதமான இடத்திற்கு சேவை செய்யும் பெருமையைப் பெற்றிருந்ததைப் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள், இந்த இடத்தின் பழைய பெருமையை மீட்டதை அவர் நினைவு கூர்ந்தார். பழங்கால எழுத்து பாணியைப் பயன்படுத்தி இந்த சுவர்களில் குருவானி பதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்தத் திட்டம் அப்போது யுனெஸ்கோவால் பெருமை செய்யப்பட்டது.

மகா குரு சாஹிபின் கருணையால், இந்த அரசு குரு கோவிந்த் சிங் அவர்களின் 350-வது ஆண்டுவிழா, குருநானக் தேவ் அவர்களின் 550-வது ஆண்டுவிழா, குரு தேக் பகதூர் அவர்களின் 400வது ஆண்டுவிழா ஆகிய புனிதமான விழாக்களைக் கொண்டாடும் நிலையைப் பெற்றது என்று பிரதமர் கூறினார். சமீப ஆண்டுகளில் குருநானக் தேவ் அவர்களின் செய்தி புதிய சக்தியுடன் உலகம் முழுவதும் சென்றடைய அனைத்து நிலையிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கர்த்தார்பூர் சாஹிப் பாதை 2019-ல் இந்த அரசால் பூர்த்தி செய்யப்பட்டது. தற்போது குரு தேக் பகதூர் அவர்களின் 400-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

புனிதமான குரு கிரந்த் சாஹிபி்ன் பிரதியை அண்மையில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வெற்றிகரமாக நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். குருவின் கருணைக்கு இதைவிட மகத்தான உதாரணம் என்னவாக இருக்க முடியும் என்று பிரதமர் வியப்பு தெரிவித்தார். ஒரு சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தபோது, இந்தியாவிற்கு 150-க்கும் அதிகமான வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களை அமெரிக்கா திருப்பித் தந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். அவற்றில் ஒன்றாக பாரசீக மொழியில் குரு ஹர்கோவிந்த் அவர்களின் பெயர் எழுதப்பட்ட குறுவாள் இருந்தது என்று அவர் கூறினார். “இதையெல்லாம் செய்ய முடிந்தது இந்த அரசுக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு” என்று பிரதமர் கூறினார்.

கல்சா பந்த் உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த பாய் மோக்கம் சிங் அவர்கள், குஜராத்தை சேர்ந்தவர் என்பது, குஜராத்துக்கு எப்போதும் பெருமைக்குரிய விஷயமாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். தேவ பூமியான துவாரஹாவில் அவரது நினைவாக குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.

படையெடுப்பாளர்களால் தாக்குதல்களும், சரணாகதிகளும் ஏற்பட்ட காலத்தில் இந்திய சமூகத்திற்கு மகத்தான குரு பாரம்பரியத்தின் பங்களிப்பை மதிப்புடன் பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த சமூகம் குழப்பத்திலும், பிரிவினைகளிலும் மூழ்கியிருந்த போது சகோதரத்துவம் என்ற செய்தியுடன் குருநானக் தேவ் அவர்கள் வந்ததாக அவர் கூறினார். அதே போல் ஒட்டுமொத்த தேசத்தின் துறவிகள் குரலை ஒருங்கிணைப்பதன் மூலம், குரு அர்ஜன் தேவ் அவர்கள் தேசத்திற்கு ஒற்றுமை உணர்வைக் கொண்டு வந்தார். மனித குலத்தின் சேவைப் பாதையை குரு ஹர்கிஷன் அவர்கள் காட்டினார். அது இன்னமும் சீக்கி்யர்களுக்கும், மனித குலத்தில் மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது. குருநானக் தேவ் அவர்களும், அவருக்குப் பின் வந்த பல்வேறு குருக்களும் இந்தியாவின் மனசாட்சியைத் தூண்டியது மட்டுமின்றி இந்தியா பாதுகாப்பாக இருக்கவும் வழிகாட்டினார்கள். நமது குருக்களின் பங்களிப்பு சமூகம் மற்றும் ஆன்மீகத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை. நமது நாடு, நாட்டின் சிந்தனை, நாட்டின் நம்பிக்கை, நேர்மை ஆகியவை இன்று பாதுகாப்பாக இருக்கிறது என்றால் அது சீக்கிய குருக்களின் மகா ‘தவத்தை’ மையமாகக் கொண்டது என்று கூறிய பிரதமர், இந்தியா மீதான பாபர் படையெடுப்பின் அபாயத்தை குருநானக் தேவ் அவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார் என்றார்.

அதே போல், குருதேக் பகதூரின் ஒட்டு மொத்த வாழ்க்கை, தேசம் முதலில் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார். குருதேக் பகதூர் அவர்கள் மனித குலத்தின் மீதான அக்கறையில் எப்போதும் உறுதியாக நின்றார் என்றும், இந்திய ஆன்மாவின் பார்வையை நமக்கு அவர் தந்தார் என்றும் பிரதமர் கூறினார். ‘ஹிந்த் கி சடார்’ என்று நாடு அவருக்கு அளித்த பட்டம், ஒவ்வொரு இந்தியரையும், சீக்கிய பாரம்பரியத்தோடு அவர் இணைத்ததைக் காட்டுகிறது. பயங்கரவாதத்திற்கும் மதவெறிக்கும் எதிராக நாடு எவ்வாறு போரிட வேண்டும் என்பதை ஔரங்கசீபுக்கு எதிரான குரு தேக் பகதூரின் வீரமும் தியாகமும் நமக்குக் கற்பிக்கிறது என்று மேலும் கூறினார். அதே போல் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் சாஹிபின் வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் மன உறுதிக்கும் தியாகத்திற்கும் வாழும் உதாரணமாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.

பிரிட்டிஷ் ஆட்சியில் நாட்டின் சுதந்திரத்திற்கான நமது விடுதலைப் போராட்டத்தில், சீக்கிய சகோதரர்களும், சகோதரிகளும் தீரத்துடன் போராடியதைப் பிரதமர் பாராட்டினார். அவர்களின் தியாகங்களுக்கு ஜாலியன்வாலாபாக் சாட்சியமாக இருக்கிறது என்று அவர் கூறினார். கடந்த காலத்திலிருந்து நினைவூட்டல்களையும், ஊக்கத்தையும் பெறுகின்ற 75-வது ஆண்டுப் பெருவிழாக் காலத்தில், இந்தப் பாரம்பரியம் இப்போதும் உயிர்ப்புடனும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இருக்கிறது என்று பிரதமர் கூறினார்.

காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை, கட்சிலிருந்து கோஹிமா வரை ஒட்டுமொத்த தேசமும், தங்களின் கனவுக்காகவும், சாதனைக்காகவும், ஒருங்கிணைந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்று பிரதமர் கூறினார். ஒரே இந்தியா உன்னத இந்தியா என்பது நாட்டின் இன்றைய மந்திரமாக இருக்கிறது. திறன் வாய்ந்த புதிய இந்தியாவை உருவாக்குவது நாட்டின் இன்றைய இலக்காக இருக்கிறது. அனைத்து ஏழைகளுக்கும் சேவை, நலிவுற்ற அனைவருக்கும் முன்னுரிமை என்பது நாட்டின் இன்றைய கொள்கையாக உள்ளது என்பதை அவர் நினைவுப்படுத்தினார்.

கட்சில் நடைபெறும் ரான் விழாவிற்கு வருகை தருமாறு பக்தர்களுக்குப் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். கட்ச் மக்களின் தொலைநோக்கும் கடின உழைப்பும் கட்ச் பகுதியின் மாற்றத்திற்கு சான்றாக விளங்குகிறது. திரு அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளான இன்று அவருக்குப் புகழஞ்சலி செலுத்திய பிரதமர், கட்ச் மீதான திரு வாஜ்பாயின் நேசத்தை நினைவு கூர்ந்தார். “நில நடுக்கத்திற்குப் பின், இங்கு மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளில் அடல் அவர்களும் அவரது அரசும் தோளோடு தோள் நின்றது” என்பதைப் பிரதமர் நினைவுபடுத்தினார்.

குஜராத்தின் சீக்கிய சங்கத்தினர் குருத்வாரா லாக்பட் சாஹிபில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 முதல் டிசம்பர் 25 வரை குருநானக் தேவ் அவர்களின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுகிறார்கள். குருநானக் தேவ் அவர்கள் தமது பயணக் காலத்தில் லாக்பட்டில் தங்கியிருந்தார். மரத்தாலான காலணி, சாய்வு மேசை, குர்முகியின் கையெழுத்துப் பிரதி உள்ளிட்ட அவரது நினைவுச் சின்னங்கள் குருத்வாரா லாக்பட் சாஹிபில் உள்ளன. 2001 நிலநடுக்கத்தின் போது இந்த குருத்வாரா கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அப்போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்த பிரதமர் மோடி, சேதங்களை சரிசெய்ய உடனடி முயற்சிகளை மேற்கொண்டார். சமயத்தின் மீது பிரதமரின் ஆழமான மதிப்பை இந்த நடவடிக்கை காட்டியது. குரு கோவிந்த் சிங் அவர்களின் 350-வது ஆண்டுவிழா, குருநானக் தேவ் அவர்களின் 550-வது ஆண்டுவிழா, குருதேக் பகதூர் அவர்களின் 400-வது ஆண்டுவிழா உள்ளிட்ட விழாக்களைக் கொண்டாடிய அண்மைக்கால முயற்சிகளிலும் இது பிரதிபலித்தது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply