Prime Minister Shri Narendra Modi will visit Kanpur on 28 December 2021 and inaugurate the completed section of Kanpur Metro Rail Project at around 1:30 PM. During the programme, the Prime Minister will also inaugurate the Bina-Panki Multiproduct Pipeline Project. Prior to this, Prime Minister will attend the 54th Convocation Ceremony of IIT Kanpur at around 11 AM.
Improving urban mobility has been one of the key focus areas of the Prime Minister. The inauguration of the completed section of the Kanpur Metro Rail Project is yet another step in this direction. This completed 9 Km long section is from IIT Kanpur to Moti Jheel. Prime Minister will inspect the Kanpur Metro Rail Project and undertake a metro ride from IIT metro station to Geeta Nagar. The entire length of the Metro Rail Project in Kanpur is 32 Km, and is being built at a cost of over Rs 11,000 crore.
Prime Minister will inaugurate the Bina-Panki Multiproduct Pipeline Project. The 356 Km long project has a capacity of around 3.45 million metric tonne per annum. Extending from Bina refinery in Madhya Pradesh to Panki in Kanpur, the project has been built at a cost of over Rs 1500 crore. It will help the region access petroleum products from the Bina refinery.
Prime Minister will be the Chief Guest of the 54th Convocation of IIT Kanpur. During the convocation, all the students will be issued digital degrees through an in-house blockchain-driven technology developed at the Institute under the National Blockchain Project. Prime Minister will launch the blockchain based digital degrees. These digital degrees can be verified globally and are unforgeable.
xxxxxxxxxxx
பிரதமர் நரேந்திர மோதி டிசம்பர் 28-ம் தேதி கான்பூர் சென்று, பகல் 1.30 மணியளவில், முடிக்கப்பட்ட கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், பினா-பங்கி பல்லுற்பத்தி பைப்லைன் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதற்கு முன்பாக, 11 மணியளவில், ஐஐடி கான்பூரின் 54-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவது பிரதமர் கவனம் செலுத்தி வரும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். பணி முடிக்கப்பட்ட கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத் தொடக்கவிழா இத்திசையில் மற்றொரு நடவடிக்கையாகும். ஐஐடி கான்பூரில் இருந்து மோதி ஜீல் வரையிலான 9 கி.மீ. தூர பிரிவு முடிக்கப்பட்டுள்ளது. கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை பார்வையிடும் பிரதமர், ஐஐடி மெட்ரோ நிலையத்திலிருந்து கீதா நகர் வரை பயணம் மேற்கொள்வார். கான்பூரில் மொத்த மெட்ரோ ரயில் தூரம் 32 கி.மீ ஆகும். இத்திட்டம் மொத்தம் ரூ.11,000 கோடியில் கட்டப்பட்டு வருகிறது.
பினா-பங்கி பல்லுற்பத்தி பைப்லைன் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 356 கி,மீ தூரம் கொண்ட இத்திட்டம் ஆண்டுக்கு சுமார் 3.45 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்டதாகும். மத்தியப் பிரதேசத்தின் பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, கான்பூரின் பங்கி வரையிலான திட்டம் ரூ.1500 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பினா சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இப்பிராந்தியத்துக்கு பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்க இது உதவும்.
கான்பூர் ஐஐடி-யின் 54-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பிரதமர் பங்கேற்கிறார். பட்டமளிப்பு விழாவில், அனைத்து மாணவர்களுக்கும், ஐஐடியில் தேசிய பிளாக்செயின் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் டிஜிடல் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்த டிஜிடல் பட்டங்கள், போலியாகத் தயாரிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பானவை என்று உலக அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
–எம்.பிரபாகரன்