வடகிழக்கு மாநிலங்களில் வேளாண் அடிப்படையிலான வளர்ச்சிக்கு வேளாண் தொழில்முனைவோர் நிபுணர் குழுவை சந்தித்தார் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்.

அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் விவசாயிகளின் வேளாண் வளர்ச்சிக்கான சாத்தியங்களை ஆராய வேளாண் தொழில்முனைவோர் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிபுணர் குழுவை ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால் சந்தித்தார்.

இந்த குழுவுக்கு அசாம் வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பித்யுத் தேகா தலைமை தாங்கினார். தற்போதுள்ள விவசாய முறைகள் மற்றும் அதன் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சாத்தியங்களை மத்திய அமைச்சருக்கு நிபுணர் குழு எடுத்துரைத்தது. ஆர்கானிக் உட்பட விவசாயத்தின் அனைத்து முறைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டன. வேளாண் மூலம் ஏற்படும் வளர்ச்சி இப்பகுதி மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்றவகையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆர்கானிக் மற்றும் இயற்கை விவசாயத்திற்கான சாத்தியங்கள் குறித்து விரிவான அறிக்கையை தயார் செய்யும்படி நிபுணர் குழுவிடம் மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்த அறிக்கை அசாம் வேளாண் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்படவுள்ளது. “வடகிழக்கு மாநிலங்களில் விவசாயத்தின் பயன்களை பெற நவீன தொழில்நுட்பம் மற்றும் நிபுணர்களின் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்” என மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply