ஜனவரி 2 அன்று மீரட்டுக்குப் பிரதமர் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

Prime Minister Shri Narendra Modi will visit Meerut on 2nd January 2022 and lay the foundation stone of Major Dhyan Chand Sports University at around 1 PM. The University will be established at Salawa and Kaili villages of Sardhana town in Meerut at an estimated cost of about Rs 700 Crore.

One of the key areas of focus for the Prime Minister is inculcating sporting culture and establishing world class sporting infrastructure in all parts of the country. The establishment of Major Dhyan Chand Sports University at Meerut will be a major step towards fulfilling this vision.

The Sports University will be equipped with modern and state of the art sports infrastructure including synthetic Hockey ground, Football ground, Basketball/Volleyball/Handball/Kabaddi ground, Lawn tennis court, Gymnasium hall, Synthetic running stadium, Swimming pool, Multipurpose hall and a Cycling velodrome. The university will also house facilities for Shooting, Squash, Gymnastics, Weightlifting, Archery, Canoeing and Kayaking, among other facilities. The University will have the capacity of training 1080 sportspersons including 540 female and 540 male sportspersons.

xxxxxxxxxx

2022 ஜனவரி 2 அன்று பிரதமர் நரேந்திர மோதி மீரட் நகருக்குப் பயணம் மேற்கொண்டு பிற்பகல் சுமார் 1 மணிக்கு மேஜர் தியான் சந்த் விளையாட்டுக்கள் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவார். மீரட்டில் உள்ள சர்தானா நகரின் அருகே சலாவா, காய்லி கிராமங்களில் ரூ.700 கோடி மதிப்பீட்டு செலவில் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

விளையாட்டுக் கலாச்சாரம் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உலகத் தரத்திலான விளையாட்டு அடிப்படைக் கட்டமைப்பு வசதியை உருவாக்குவது உட்பட பிரதமர் கவனம் செலுத்தும் முக்கியத் துறைகளில் ஒன்றாக இது உள்ளது. மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டுக்கள் பல்கலைக்கழகம் அமைப்பது இந்தத் தொலைநோக்குப் பார்வையை நிறைவு செய்வதை நோக்கிய முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.

செயற்கை முறையிலான ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து/வாலிபால்/கைப்பந்து/கபடி மைதானம், டென்னிஸ் கோர்ட், உடற்பயிற்சிக் கூடம், செயற்கை முறையிலான ஓட்டப்பந்தய அரங்கம், நீச்சல் குளம், பல நோக்கு அரங்கம், சைக்கிள் பந்தயத்திற்கான பாதை உட்பட இந்த விளையாட்டுக்கள் பல்கலைக்கழகம் நவீன மற்றும் பல வகை விளையாட்டு உள்கட்டமைப்புகளைக் கொண்டதாக இருக்கும். துப்பாக்கிச்சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், வில்வித்தை, படகு சவாரி, துடுப்புப் படகு சவாரி போன்ற வசதிகளும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கும். 540 விளையாட்டு வீராங்கனைகள், 540 விளையாட்டு வீரர்கள் என 1080 பேருக்குப் பயிற்சி அளிக்கும் திறனை இந்தப் பல்கலைக்கழகம் பெற்றிருக்கும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply