இரக்கமற்ற அரக்கர்களை என்கவுன்டரில் சுட்டு கொன்ற போலீசார்!-மகிழ்ச்சியில் இருக்கும் மக்கள்!

செங்கல்பட்டு மாவட்டம் சின்னநத்தம் பகுதியில் வசித்து வந்த 38 வயதுடைய கார்த்திக் என்பவரின் மீது இரண்டு கொலை வழக்கு உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நிபந்தனை ஜாமினில் தினமும் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்த கார்த்திக்; நேற்று (06.01.2022) மாலை 6.30 மணி அளவில் அங்கு சென்றார். கையெழுத்து போட்ட பின் அருகே இருந்த டீ கடையில் 6.45 மணி அளவில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை கார்த்திக் மீது வீசி. அவரை நிலைகுழைய செய்து, சரமாரியாக அவரது தலை பகுதி முழுவதையும் வெட்டி சிதைத்தனர். இதனால் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சம்பவ இடத்தில் சோதனையிட்ட காவல்துறையினர் ஒரு பையில் இருந்து 5 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.

அங்கிருந்து தப்பியோடிய அதே கும்பல் கார்த்திக் உறவினரான செங்கல்பட்டு, மேட்டுத்தெரு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சீனுவாசன் என்பவரது மகன் மகேஷ் ( 22) என்பவரை அவரது வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்த போதே சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.

என்கவுன்டரில் சுட்டுகொல்லப்பட்ட ரவுடிகள்.

இந்நிலையில், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த போலீசார், செங்கல்பட்டு காட்டு பகுதியில் மறைந்து இருந்த கொலையாளிகள் ரவுடி மொய்தீன், ரவுடி தினேஷ் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சித்தபோது; போலீசார் மீது அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதால், கொலையாளிகள் இருவரையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

என்கவுன்டர் டந்த இடத்தில் இருந்து நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றினர்.

என்கவுன்டரில் சுட்டு கொள்ளப்பட்ட ரவுடி மொய்தீன், ரவுடி தினேஷ் ஆகியோர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இரட்டைக் கொலையில் தொடர்புடைய ரவுடி குணா என்பவனை போலீசார் உயிருடன் கைது செய்து உள்ளனர்.

செங்கல்பட்டு நகர காவல் நிலைய ஆய்வாளர் வடிவேல் முருகன்.

இச்சம்பவம் குறித்து மேலும் விரிவான தகவல்களை அறிவதற்காக, செங்கல்பட்டு நகர காவல் நிலைய ஆய்வாளர் வடிவேல் முருகனை நாம் இரண்டு முறை தொடர்பு கொண்டோம். மேற்படி உடல்களை போஸ்ட் மார்டம் செய்யும் இடத்தில் இருப்பதாக அவர் நம்மிடம் தெரிவித்தார்..

எது எப்படியோ; நாடு முழுவதும் வெகுஜன அப்பாவி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இதுப்போன்ற இரக்கமற்ற அரக்கர்களையும்; கூலிக்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் சமூக விரோதிகளையும் சட்டப்படியோ; தர்மப்படியோ நிச்சயம் தண்டித்தே ஆக வேண்டும். இதில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் மக்கள் மகிழ்ச்சியாகவும்; நிம்மதியாகவும் வாழ முடியும்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply