உள்ளாட்சித்தகவல் செய்தி எதிரொலி!-குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குடவாசல் ரவுடி சீட்டிங் பாபு மீது கார் மோசடி சம்மந்தமாக வழக்கு பதிவு செய்த குடவாசல் காவல் ஆய்வாளர்!

குடவாசல் ரவுடி சீட்டிங் ஆர்.எஸ். பாபு.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குடவாசல் ரவுடி சீட்டிங் ஆர்.எஸ். பாபுவிடம், சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர், தனது கார் ஒன்றையும் மற்றும் தனது நண்பர்களின் கார் இரண்டையும் சேர்த்து 3 கார்களை வாடகைக்கு கொடுத்துள்ளார்.

மேற்படி மூன்று கார்களுக்கும் ஒரு மாதம் மட்டுமே குடவாசல் சீட்டிங் ஆர்.எஸ். பாபு வாடகை கொடுத்துள்ளார். அதன் பிறகு கார்களை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். கார்களை திருப்பி கேட்ட ஜனார்த்தனனை ரவுடி ஆர் எஸ் பாபு ஆயுதம் கொண்டு மிரட்டி உள்ளார். இது சம்பந்தமாக குடவாசல் காவல் நிலையத்திலும், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், அதன் பிறகு நன்னிலம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் இளங்கோவனிடமும் உரிய ஆதாரத்தோடு எழுத்துப் பூர்வமாக ஜனார்த்தனன் புகார் அளித்தும், பல முறை நேரில் சந்தித்து முறையிட்டும், குடவாசல் காவல் நிலைய ஆய்வாளர் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இத்தகவல் நமது ”யுடிஎல் மீடியா” கவனத்திற்கு வந்தவுடன், கார்களை பறிகொடுத்த ஜனார்த்தனன் சொல்லும் தகவல்கள் அனைத்தும் உண்மைதானா?! என்பதை நமது ”யுடிஎல் மீடியா டீம்” கள ஆய்வு செய்து உண்மை தன்மையை உறுதி செய்தது.

இந்நிலையில், ‘குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குடவாசல் ரவுடி சீட்டிங் ஆர்.எஸ். பாபுவிடம், மூன்று காரர்களை பறிகொடுத்த சென்னை சேர்ந்த ஜனார்த்தனன்!’ – என்ற தலைப்பில் நமது ”உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் 07.01.2022 அதிகாலை 4: 48 மணிக்கு செய்தி வெளியிட்டு இருந்தோம்.

மேலும், இத்தகவலை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு உள்துறை முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி பாலகிருஷ்ணன், திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பி இருந்தோம்.

07.01.2022 காலை 7: 06 மணி அளவில் வாட்ஸ்அப் மூலம் இச்செய்தி அறிந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி பாலகிருஷ்ணன், உடனே இது சம்பந்தமாக ஆய்வு செய்வதாக நமக்கு 07.01.2022. காலை 7: 07 மணிக்கு பதிலளித்தார்.

அதன் பிறகு ரவுடி குடவாசல் சீட்டிங் பாபுவிடம் கார்களை பறிகொடுத்த ஜனார்த்தனனை தொடர்புகொண்ட குடவாசல் காவல் நிலைய ஆய்வாளர் கருணாநிதி, உடனே FIR போடுகிறேன் என்று உறுதி அளித்ததோடு; குடவாசல் வந்து அலைய வேண்டாம். ஆன்லைன் மூலமாகவே FIR -பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் என்று உறுதி அளித்தார். அதன்படி 07.01.2022. மதியம் 2 மணிக்கு குடவாசல் ரவுடி சீட்டிங் பாபு மீது வழக்கு பதிவு (CRIME NO: 18/2022) செய்து உள்ளார். வழக்கு பதிவு செய்த விபரத்தையும், அதற்கான குற்ற எண்னையும் காரை பறிகொடுத்த ஜனார்த்தனுக்கு குடவாசல் காவல் நிலைய ஆய்வாளர் கருணாநிதி தெரியப்படுத்தியுள்ளார்.

V.Balakrishnan IPS
Inspector General of Police, Central Zone, Delta districts.

இந்த வழக்கு விஷயத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு சம்பந்தப்பட்ட புகாரை ஆய்வு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி பாலகிருஷ்ணன் அவர்களுக்கு, நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தின் சார்பாகவும், நமது UTL MEDIA TEAM சார்பாகவும், நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

அந்த முதல் தகவல் அறிக்கையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

Untitled-Document_watermark-1

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

இதுதொடர்பான முந்தைய செய்திக்கு கீழ்காணும் இணைப்பை ”கிளிக்” செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2022/01/07/66232/

Leave a Reply