கூட்டு குடும்ப முறை மற்றும் மூத்தோருக்கு அளிக்கப்படும் மரியாதை ஆகியவை நமது நாகரீக விழுமியன்களின் முக்கிய அம்சங்கள்!- குடியரசுத் துணைத் தலைவர்.

The Vice President, Shri M. Venkaiah Naidu today called for strengthening the  joint family system and the tradition of respecting elders, which are the core aspects of India’s civilisational values.

Underlining the important role played by elders in a family in guiding and advising the younger members, he said the intergenerational bonding helps in protecting and promoting the value system.

Shri Naidu virtually interacted with the inmates of an elderly home at Swarna Bharat Trust, Nellore on the occasion of the Sankranthi festival. He enquired about the inmates’ wellbeing and the amenities available to them. He complimented the staff and officials of the Trust for their initiatives.

Reflecting on the importance of festivals in Indian culture, Shri Naidu underlined that youth today should understand the significance of festivals like Sankranthi in celebrating nature’s bounties, bringing families together and  ushering in peace and harmony in society.

xxxxxxxx

கூட்டு குடும்ப முறை மற்றும் மூத்தோரை  மதிக்கும் பாரம்பரியம்  ஆகியவை நமது நாகரீக விழுமியன்களின்  முக்கிய அம்சங்கள்  என்றும், அவற்றை வலுப்படுத்த வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களிடம் குடியரசுத் துணைத் தலைவர்  திரு. எம். வெங்கையா நாயுடு காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்திய பண்டிகைகளின் முக்கியத்துவத்தை அறிந்து, அவற்றை இளைஞர்கள் கொண்டாட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

குடும்பத்தை வழிநடத்துவதிலும், இளையவர்களுக்கு அறிவுரை வழங்குவதிலும், மூத்தவர்களின் முக்கியமான  பங்கை குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பு, குடும்ப மதிப்பு முறையை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் உதவுகிறது என கூறினார்.

முதியோர் இல்லத்தில் உள்ளவர்களின் நலனையும், அவர்களுக்கு கிடைக்கும் வசதிகளையும் அவர் விசாரித்தார்.  இவர்களை கவனித்து கொள்ளும் முதியோர் இல்லத்தின் ஊழியர்களையும், அறக்கட்டளை அதிகாரிகளையும் அவர் பாராட்டினார்.

இந்திய கலாச்சாரத்தில், பண்டிகைகளின் முக்கியத்துவம்  பற்றி எடுத்துக்கூறிய திரு. வெங்கையா நாயுடு, இயற்கை வளங்களை கொண்டாடுவதிலும், குடும்பங்களை ஒன்றாக இணைப்பதிலும்  சங்கராந்தி போன்ற பண்டிகைகளின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply