Prime Minister Shri Narendra Modi delivered the keynote address at the national launch ceremony of ‘Azadi Ke Amrit Mahotsav se Swarnim Bharat Ke Ore’. He also flagged off seven initiatives of Brahma Kumaris. Lok Sabha Speaker, Shri Om Birla, Governor of Rajasthan Shri Kalraj Mishra, Chief Minister of Rajasthan Shri Ashok Gehlot, Chief Minister Gujarat Shri Bhupendra Patel, Union Ministers Shri G. Kishan Reddy, Bhupender Yadav, Shri Arjun Ram Meghwal, Shri Parshottam Rupala and Shri Kailash Choudhary were among those present on the occasion.
Addressing the gathering, the Prime Minister said the program by Brahma Kumari Sanstha, in the Azadi Ka Amrit Mahotsav celebration, exemplifies the feeling, spirit and inspiration for a golden India. He said that there is no difference between personal aspirations and successes on the one hand and national aspirations and successes on the other. The Prime Minister stressed that our progress lies in the progress of the nation. “The nation exists from us, and we exist through the nation. This realization is becoming the biggest strength of us Indians in the making of a new India. Everything the country is doing today includes ‘Sabka Prayas’”, he said. He added that ‘Sabka Saath, Sabka Vikas Sabka Vishwas, Sabka Prayas’ is becoming the guiding motto of the country.
Commenting on the innovative and progressive new thinking and new approach of the New India, the Prime Minister remarked that “today we are creating a system in which there is no place for discrimination, we are building a society that stands firmly on the foundation of equality and social justice”.
The Prime Minister remarked on the Indian tradition of veneration and the importance of women. He said “when the world was in deep darkness and caught in the old thinking about women, then India used to worship women as Maatru Shakti and Goddess. We had women scholars like Gargi, Maitreyi, Anusuya, Arundhati and Madalasa giving knowledge to society”. He noted the contribution of remarkable women in different epochs of Indian history. In the troubled medieval times, the Prime Minister recalled, there were great women like Panna Dai and Mirabai in this country. And during the freedom struggle too, many women have sacrificed. From Kittur’s Rani Chennamma, Matangini Hazra, Rani Lakshmibai, Veerangana Jhalkari Bai to, in the social sphere, Ahilyabai Holkar and Savitribai Phule maintained India’s identity, he said. The Prime Minister listed developments like entry of women in the armed forces, more maternity leaves, better political participation in the form of more voting and representation in the Council of Ministers as a mark of new confidence among women. He expressed satisfaction that this movement is society-led and the gender ratio has improved in the country.
The Prime Minister urged everyone to keep our culture, our civilization, our values alive and to preserve and promote our spirituality and our diversity. At the same time, he emphasized the need to continuously modernize the systems of technology, infrastructure, education and health.
The Prime Minister noted that the time of “Amrit Kaal is not for dreaming while sleeping, but for fulfilling your resolutions awake. The coming 25 years are the period of utmost hard work, sacrifice, and ‘Tapasya’. This is a period of 25 years to get back what our society has lost in hundreds of years of slavery”.
The Prime Minister said that it needs to be admitted that in the 75 years after independence the evil of ignoring duties and not keeping them paramount has entered the national life. He noted that during this period, we only spent time talking and fighting about rights. He stressed that talk of rights, to some extent, may be correct, in some circumstances but forgetting one’s duties completely has played a major role in keeping India weak. The Prime Minister urged everyone to “light a lamp in the heart of every citizen of the country – the lamp of duty. Together, we will take the country forward on the path of duty, then the evils prevailing in the society will also be removed and the country will reach new heights”.
The Prime Minister regretted the tendency to tarnish the image of India, even at the international level. “We cannot get away from this by saying that this is just politics. This is not politics, this is the question of our country. today, when we are celebrating the Azadi ka Amrit Mahotsav, it is also our responsibility that the world should know India properly”, he emphasized. The Prime Minister concluded that such organizations which have an international presence, should convey the correct picture of India to the people of other countries and tell the truth about the rumours being spread about India. He also appealed to the organizations like Brahma Kumaris to encourage people to come to India and know about the country.
xxxxxx
சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவிலிருந்து தங்க இந்தியாவை நோக்கி’ என்பது குறித்த தேசிய விழாவைத் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோதி முக்கிய உரை நிகழ்த்தினார். பிரம்ம குமாரிகளின் ஏழு முன்முயற்சிகளையும் அவர் தொடங்கிவைத்தார்.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மத்திய அமைச்சர்கள் ஜி.கிஷன் ரெட்டி, பூபேந்திர யாதவ், அர்ஜுன் ராம் மெக்கால், பர்ஷோத்தம் ரூபாலா கைலாஷ் சவுத்ரி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
உரையாற்றிய பிரதமர், சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழா கொண்டாட்டத்தின்போது,
பிரம்ம குமாரி அமைப்பால் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, தங்க இந்தியாவுக்கான மனவோட்டம், உணர்வு, ஊக்கம் ஆகியவற்றை விளக்குவதாகும் என்றார். ஒரு பக்கம் தனிபட்ட விருப்பங்கள் மற்றும் வெற்றிகள் மறுபக்கம் தேசிய விருப்பங்கள் மற்றும் வெற்றிகள் ஆகியவற்றுக்கிடையே வேறுபாடு எதுவும் இல்லை என்று அவர் கூறினார். நமது முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றத்தில் உள்ளடங்கியது என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார். “இந்த நாடு நம்மிலிருந்து வாழ்கிறது, இந்த நாட்டின் மூலம் நாம் வாழ்கிறோம். இதை உணர்வது புதிய இந்தியாவை உருவாக்குவதில் இந்தியர்களாகிய நமக்கு மிகப்பெரிய பலமாகும். நாட்டில் இன்று மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு விஷயமும் ‘அனைவரின் முயற்சி’யை உள்ளடக்கியது” என்று அவர் கூறினார். ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி’ என்பது நாட்டின் வழிகாட்டும் குறிக்கோளாக மாறியிருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
புதிய இந்தியாவின் புதுமையான முற்போக்கான புதிய சிந்தனை மற்றும் புதிய அணுகுமுறை குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், “இன்று நாம் உருவாக்கியிருக்கும் நிர்வாக முறையில் பாகுபாடு என்பதற்கு இடமில்லை, நாம் கட்டமைத்து வரும் சமூகம் சமத்துவம் மற்றும் சமூக நீதி அடித்தளத்தின் மீது உறுதியாக நிற்கிறது” என்றார்.
பெண்களை வழிபடுகின்ற மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிற இந்தியப் பாரம்பரியம் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். “பெண்கள் பற்றி உலகம் ஆழ்ந்த இருளிலும் பழமை சிந்தனையிலும் கட்டுண்டு இருந்தபோது, இந்தியா பெண்களை மகளிர் சக்தியாகவும் பெண் தெய்வமாகவும் வழிபட்டது. கார்கி, மைத்ரேயி, அனுசூயா, அருந்ததி, மடாலசா போன்று சமூகத்திற்கு அறிவை தருகின்ற பெண் ஞானிகளை நாம் கொண்டிருந்தோம்” என்று அவர் கூறினார். இந்திய வரலாற்றின் பல்வேறு சகாப்தங்களில் பெண்கள் சிறப்புக்குரிய பங்களிப்பு செய்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மிகவும் சிக்கல் மிகுந்த மத்திய காலங்களில் பண்ணாதாய், மீராபாய் போன்ற மகத்தான பெண்கள் நாட்டில் இருந்ததைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். விடுதலைப் போராட்ட காலத்திலும் கூட பல பெண்கள் தியாகம் செய்திருக்கிறார்கள். கிட்டூர் ராணி சென்னம்மா, மதாங்கினி ஹஸ்ரா, ராணி லட்சுமிபாய். வீராங்கானா ஜல்காரி பாய் தொடங்கி சமூகத் தளத்தில் அஹில்யா பாய் ஹோல்கர், சாவித்திரிபாய் பூலே ஆகியோர் இந்தியாவின் அடையாளமாகத் திகழ்ந்தனர் என்று அவர் கூறினார். பெண்களிடையே புதிய நம்பிக்கையின் குறியீடாக இராணுவத்தில் பெண்கள் இடம்பெற்றிருப்பது, கூடுதலான பேறுகால விடுப்பு கள், அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பது என்ற வடிவில் சிறந்த அரசியல் பங்கேற்பு, அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் போன்ற மாற்றங்களைப் பிரதமர் பட்டியலிட்டார். சமூகத்திற்கு வழிகாட்டும் இந்த வளர்ச்சி குறித்தும் நாட்டில் பாலின விகிதம் அதிகரித்திருப்பது பற்றியும் அவர் திருப்தி தெரிவித்தார்.
நமது கலாச்சாரத்தை நமது நாகரீகத்தை நமது மாண்புகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் நமது ஆன்மீகம், நமது பன்முகத் தன்மை ஆகியவற்றைப் பாதுகாத்து மேம்படுத்தவும் அனைவரையும் பிரதமர் வலியுறுத்தினார். அதேசமயம், தொழில்நுட்பம், அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றைத் தொடர்ந்து நவீனமாக்குவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அமிர்த காலம் என்பது உறங்கும்போது கனவு காண்பதற்காக அல்ல, உங்களின் தீர்மானங்களை விழிப்புடன் நிறைவேற்றுவதற்கானது. வரும் 25 ஆண்டுகள் அதிகபட்ச கடின உழைப்பு, தியாகம், ‘தவம்’ ஆகியவற்றின் காலமாகும். அடிமைத்தனத்தின் பல நூற்றாண்டுகளின்போது நமது சமூகம் இழந்தவற்றை மீண்டும் பெறுவதற்கானது இந்த 25 ஆண்டுகாலம்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
சுதந்திரம் அடைந்ததற்குப் பிந்தைய 75 ஆண்டுகளில் கடமைகளைப் புறக்கணித்து அவற்றை மிக உயர்ந்ததாகக் கருதாத தீமை தேசிய வாழ்க்கையில் நுழைந்து விட்டது என்பதை ஒப்புக்கொள்வது அவசியம் என்று பிரதமர் கூறினார். இந்தக் காலத்தை நாம் பேசுவதிலும் உரிமைகளுக்காகப் போராடுவதிலும் மட்டுமே செலவழித்து விட்டோம் என்று அவர் குறிப்பிட்டார். பேசுவதற்கான உரிமை சில சூழ்நிலைகளில் ஒரு எல்லை வரை சரியானதுதான்; ஆனால் கடமைகளை முழுமையாக மறந்துவிடுவது அதிகபட்சமாக இருந்தது இந்தியாவை பலவீனமாக்கி விட்டது என்று அவர் கூறினார். “நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் மனதிலும் ஒரு விளக்கை – கடமை எனும் விளக்கை – ஏற்ற வேண்டும். ஒன்றிணைந்து கடமையின் பாதையில் இந்த நாட்டை முன்னேற்றினால் சமூகத்தில் தங்கியுள்ள தீமைகள் அகற்றப்படும். இந்த நாடு புதிய உச்சங்களை எட்டும்” என்று அனைவரிடமும் வலியுறுத்தினார்.
இந்தியாவின் தோற்றத்தை சிதைக்கும் போக்கு சர்வதேச அளவிலும்கூட இருப்பது குறித்துப் பிரதமர் கவலை தெரிவித்தார். “வெறும் அரசியல் என்று கூறி இதனை நாம் விட்டுவிட முடியாது. இது அரசியல் அல்ல, நமது நாட்டின் பிரச்சனை. சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவை நாம் கொண்டாடி வரும் இந்த வேளையில், உலகம் இந்தியாவை முறையாக அறியச் செய்வதும் நமது பொறுப்பாகும்” என்பதை அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச இருப்பைக் கொண்டுள்ள இத்தகைய அமைப்புகள் மற்ற நாடுகளின் மக்களுக்கு இந்தியா பற்றிய சரியான தோற்றத்தைக் கொண்டுசெல்ல வேண்டும் என்றும் இந்தியா பற்றி பரப்பப்படுகின்றவை வதந்திகள் என்ற உண்மையை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறி பிரதமர் உரையை நிறைவு செய்தார். இந்தியாவைப் பற்றி அறிந்துகொள்ள இந்தியாவுக்கு மக்கள் வருகை தருவதற்கு பிரம்ம குமாரிகள் போன்ற அமைப்புகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
–எம்.பிரபாகரன்