எம்ஓஐஎல் நிறுவனத்தின் செயல்பாட்டை மத்திய அமைச்சர் ஃபகன் சிங் குலாஸ்தே ஆய்வு செய்தார்.

மத்தியப் பிரதேசம் பாலாகாட்டில் உள்ள மாங்கனீசு தாது இந்தியா நிறுவனத்தின்(எம்ஓஐஎல்) செயல்பாட்டை மத்திய எஃகு மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ஃபகன் சிங் குலாஸ்தே, நேற்று ஆய்வு செய்து அதன் எதிர்காலத்  திட்டங்களை கேட்டறிந்தார்.   பெருந்தொற்று நேரத்தில் நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து அவர் திருப்தி தெரிவித்தார். நாட்டின் உள்நாட்டுத் தேவைகளை நிறைவேற்ற வேகமான வளர்ச்சிக்கு அவர் அறிவுறுத்தினர்.

பாலாகாட்டில் உள்ள எம்ஓஐஎல் நிறுவனத்தின் சுரங்கத்தை, மத்திய அமைச்சர் திரு ஃபகன் சிங் குலாஸ்தே, மாநில ஆயுஷ் துறை அமைச்சர்  திரு ராம் கிஷோர் கன்வார் மற்றம் பாலாகாட் செட்டப் பேரவை உறுப்பினர்   திரு தல்சிங் பைசன் ஆகியோருடன் பார்வையிட்டார். அவர்களை எம்ஓஐஎல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் திரு எம்.பி. சவத்திரி வரவேற்றார். ஊழியர்களுக்கு அளிக்கப்படும் வசதிகளையும் அவர்கள் பார்வையிட்டார். பாலாகாட்டில் உள்ள ஃபெர்ரோ மாங்கனீசு சுரங்கத்தையும் திரு குலாஸ்தே பார்வையிட்டார்.  எம்ஓஐஎல் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு புதிய உற்பத்தி மையம் அமைக்க  மாநில் அரசு அளித்த ஆதரவுக்கு கன்வார் நன்றி தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply