Prime Minister Shri Narendra Modi will address 30th National Commission for Women (NCW) Foundation Day programme on 31st January, 2022 at 4:30 PM via video conferencing. The theme of the programme is ‘She The Change Maker’, aimed at celebrating the achievements of women in different fields.
The State Commissions for Women, Department of Women and Child Development in State Governments, University and College teaching faculty and students, voluntary organisations, women entrepreneurs and business associations will be a part of the event. Union Minister for Women and Child Development will also be present on the occasion.
xxxxxx
பிரதமர் நரேந்திர மோதி, ஜனவரி 31-ந்தேதி மாலை 4.30 மணியளவில், 30-வது தேசிய மகளிர் ஆணைய தின நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றுகிறார். பல்வேறு துறைகளில் பெண் சாதனையாளர்களைப் போற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியின் கருப்பொருள் ‘அவள் மாற்றத்தை ஏற்படுத்துபவள்’ என்பதாகும்.
மாநில மகளிர் ஆணையங்கள், மாநில அரசுகளின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைகள், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், பெண் தொழில்முனைவோர், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரும் கலந்து கொள்வார்.
–எம்.பிரபாகரன்