The President of India Shri Ram Nath Kovind addressed the joint sitting of the two Houses of Parliament, here today. The President, in his address, highlighted the various initiatives taken by the Central Government for women empowerment, to provide them new opportunities for employment and equal participation in various fields.
In his address the President said “Women are playing an increasingly important role in providing impetus to rural economy. Banks have extended financial help to the tune of Rupees 65,000 crore to more than 28 lakh Self-Help Groups in 2021-22. This is four times the amount extended in 2014-15. The government has also provided training to thousands of members of the women self-help groups and made them partners as ‘Banking Sakhi’. These women are delivering banking services to rural households at the doorsteps”.
The President stated “Women’s empowerment is one of the top priorities of my government. We are all witness to the success of Ujjwala Yojana. Entrepreneurship and skills of the mothers and sisters of our country have been promoted through the “Mudra” scheme. “Beti Bachao, Beti Padhao” initiative has yielded many positive results, and there has been an encouraging improvement in the number of girls enrolled in schools. Treating sons and daughters as equals, my government has also introduced a Bill to increase the minimum age of marriage for women from 18 years to 21 years at par with men”.
“The government has made a beginning to liberate the society from the manifestly arbitrary practice of Triple Talaq by making it a criminal offence. Restrictions on Muslim women from performing the Haj only with Mehram have also been removed. While about three crore students from minority communities were provided scholarships prior to 2014, my government has provided scholarships to 4.5 crore such students since 2014. This has led to a significant reduction in the school dropout rate of Muslim girls and an increase in their enrolment”, stated the President.
The President said “A provision has also been made for Gender Inclusion Fund in the National Education Policy to promote learning capability among our daughters. It is a matter of happiness that all the existing 33 Sainik Schools have started admitting girl students. The government has also approved the admission of women cadets in the National Defence Academy. The first batch of women cadets will enter the NDA in June 2022. With the policy decisions and encouragement of my government, the number of women personnel in various police forces has more than doubled as compared to 2014”.
xxxxxxxxx
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றினார். பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், அவர்களது வேலைவாய்ப்பிற்கான மற்றும் பல்வேறு துறைகளில் சமமான பங்களிப்பை வழங்குவதற்கான புதிய வய்ப்புகள் உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு எடுத்துள்ள பல்வேறு முன்முயற்சிகள் குறித்து குடியரசுத் தலைவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.
“கிராமப்புற பொருளாதாரத்திற்கு உத்வேகத்தை வழங்குவதில் பெண்கள் அதிகளவில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 2021-22-ம் ஆண்டில் 28 லட்சத்திற்கும் அதிகமான சுயஉதவி குழுக்களுக்கு 65,000 கோடி ரூபாய் நிதி உதவியை வங்கிகள் வழங்கியுள்ளன. 2014-15-ல் வழங்கப்பட்ட தொகையை விட இது நான்கு மடங்கு அதிகம். மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களை ‘வங்கித் தோழர்கள்’ என கூட்டாளிகளாக்கியுள்ளது அரசு. இந்த பெண்கள் கிராமப்புற குடும்பங்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று வங்கிச் சேவைகளை வழங்குகிறார்கள்,” என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
“எனது அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் பெண்களுக்கான அதிகாரமளித்தல் ஒன்றாகும். உஜ்வாலா திட்டத்தின் வெற்றிக்கு நாம் அனைவரும் சாட்சி. “முத்ரா” திட்டத்தின் மூலம் நமது நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தொழில்முனைவு மற்றும் திறன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. “பெண் குழந்தைகளை பாதுகாத்துப் படிக்க வைப்போம்” முன்முயற்சி பல நேர்மறையான விளைவுகளைத் தந்துள்ளது, மேலும், பள்ளிகளில் சேரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையில் ஊக்கமளிக்கும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மகன்களையும் மகள்களையும் சமமாக நடத்தும் வகையில், ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவையும் எனது அரசு அறிமுகப்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.
“முத்தலாக் முறையைக் கிரிமினல் குற்றமாக ஆக்கி, அத்தகைய தன்னிச்சையான நடைமுறையில் இருந்து சமூகத்தை விடுவிக்க அரசு ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லீம் பெண்கள் மெஹ்ராமுடன் மட்டும் ஹஜ் செய்யக் கூடாது என்ற கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டுக்கு முன்னர் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சுமார் மூன்று கோடி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில், 2014-ம் ஆண்டு முதல் 4.5 கோடி மாணவர்களுக்கு எனது அரசு கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளது. இது முஸ்லிம் பெண்களின் பள்ளி இடைநிற்றல் விகிதத்தில் குறிப்பிடத்தக்க குறைப்புக்கு வழிவகுத்தது மற்றும் அவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது,” என குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
“நமது பெண் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் தேசியக் கல்விக் கொள்கையில் பாலினத்தை உள்ளடக்கிய நிதிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள 33 சைனிக் பள்ளிகளிலும் பெண் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண் வீரர்களை சேர்ப்பதற்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜுன் 2022-ல் பெண் வீரர்களின் முதல் தொகுதி தேசியப் பாதுகாப்பு அகாடமியில் நுழையும். எனது அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் ஊக்கத்தால், 2014-ம் ஆண்டை விட பல்வேறு காவல் படைகளில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது”, என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
–திவாஹர்