மனிதன் விழிகொண்டு வாழவில்லை..! தாய்மொழி கொண்டுதான் வாழ்கின்றான்!

‘உள்ளாட்சித்தகவல்’ ஊடகத்தின் ஆசிரியர் Dr.துரைபெஞ்சமின்.

மனிதன் விழிகொண்டு வாழவில்லை..!
தாய்மொழி கொண்டுதான் வாழ்கின்றான்!

கருவறையில் உருவாகும் குழந்தைக்கு
கற்பனையும்; சிந்தனையும்
தாய்மொழியில்தான் உருவாகும்!

தாயை இகழ்ந்தவனும்
தாய்மொழியை மறந்தவனும்
விருத்தியடைந்ததாய்
இதுவரை உலகில் எங்கும் விபரமில்லை!

தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை
தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை!

தாய்மொழி கண் போன்றது
பிறமொழிகள் கண்ணாடி போன்றது!

கண்களை முற்றிலும் இழந்துவிட்டு
கண்ணாடி கொண்டுப் பார்ப்பதில் என்ன பயன்?!

தாய்மொழி மொழி என்பது உயிர்
தாய்மொழி மொழி என்பது உணர்வு
தாய்மொழி மொழி என்பது உயர்வு
தாய்மொழி மொழி என்பது கலை
தாய்மொழி மொழி என்பது கலாச்சாரம்
தாய்மொழி மொழி என்பது பண்பாடு
தாய்மொழி மொழி என்பது இலக்கணம்
தாய்மொழி மொழி என்பது இலக்கியம்
தாய்மொழி மொழி என்பது வரலாறு
தாய்மொழி மொழி என்பது நமது அடையாளம்
தாயைப் போற்றுவோம்..!

தாய்மொழியை அரியணையில் ஏற்றுவோம்!

தாய்மொழி-கண்-போன்றது-1

Leave a Reply