பொருளாதார நெருக்கடி!-போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!-நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனம்!-இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உத்தரவு.

இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே.

2273-86_T-1_watermarked

2273-86_E-1_watermarked

2273-86_S-1_watermarked

இலங்கையில் ராஜபட்சே வகையறாக்களின் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சி நிர்வாகத்தில், எடுக்கப்பட்ட தவறான பொருளாதார கொள்கை முடிவுகளால் தற்போது இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வறுமை தலைவிரித்தாடுகிறது.

அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் காய்கறிகள் உள்பட அத்யாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் இவற்றின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதோடு; இவற்றிற்கு அங்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழை, நடுத்தர மக்கள் பஞ்சம், பசி, பட்டினியால் தவித்து வருகின்றனர்.

இந்நிலைமை தொடர்ந்து நாளுக்கு நாள் அங்கு அதிகரித்து வருவதால், ஆட்சியாளர்களுக்கு எதிராக நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இப்போராட்டத்தின் உச்சகட்டமாக இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே குடியிருந்து வரும் அதிபர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து ஏற்பட்ட வன்முறையில் ராணுவம், காவல்துறை வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

கூட்டத்தை கலைப்பதற்காக நடைபெற்ற தாக்குதலில் ராணுவம், காவல்துறை, பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர். இதையடுத்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இலங்கை முழுவதும் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால், போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை முழுவதும் அவசரகால நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இதற்கான உத்தரவை இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பிறப்பித்துள்ளார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply