வள்ளியூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு!-கண்டுகொள்ளாத அறநிலையத்துறை அதிகாரிகள்.

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் மிக முக்கியமான பேரூராட்சியாக கருதப்படுவது வள்ளியூர் ஆகும். இப்பேரூராட்சியில் வள்ளியூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான நிலங்கள் இருந்து வரும் நிலையில், பலதரபட்ட மக்களால் இக்கோயில் நிலங்கள் அவ்வப்போது ஆக்கிரமிக்கபட்டு வருவதும், அதன்பின் பக்தர்களின் எதிர்ப்பிற்கு பிறகு, இந்நிலங்கள் மீட்கபடுவதும் வழக்கமா நடைமுறையாக இன்று வரை இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (04/04/2022) காலை முதல் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வள்ளியூர் பேரூராட்சி 14-வது வார்டு நம்பியான் விளை கிராமத்தில், வள்ளியூர் மேம்பாலத்தின் கிழக்குபக்கம், நிலா பேக்கரிக்கு வடக்குபக்கம் வள்ளியூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள நிலத்தை, கிழவநேரியை சார்ந்த ஒருவர், தனது ஆதரவாளர்கள் உதவியுடன் முள்வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இதை பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த வள்ளியூர் பேரூராட்சி 14 வது வார்டு உறுப்பினர் சுமித்ரா ராஜேஷ் என்பவர் இந்த ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்டு தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வடக்கு வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவரிடம் நேற்று (05/04/2022) எழுத்துப்பூர்வமான புகார் ஒன்றையும் அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நில ஆக்கிரமிப்பாளர்; ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய வள்ளியூர் பேரூராட்சி 14 வது வார்டு உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த சுமித்ராவை அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று மிரட்டி உள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நில ஆக்கிரமிப்பு விவகாரம்; தற்போது அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே உத்தரவிட வேண்டும்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply