கிருஷ்ணகிரி, தர்மபுரி, உட்பட 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்மழை காரணமாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 1,117 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக கெலவரபள்ளி அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply