குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி ஜப்பான் செல்கிறார்!

குவாட் அமைப்பு தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி நாளை ஜப்பான் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடாவின் அழைப்பை ஏற்று குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோதி மே 24, 2022 அன்று அமெரிக்க அதிபர் ஜோசப் ஆர் பைடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமருடன் கலந்து கொள்வார்.

ஆஸ்திரேலியாவில் மே 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருப்பதால் அதில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமருடன் நரேந்திர மோதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தக்கூடும்.

எஸ்.சதஸ் சர்மா

Leave a Reply