ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில்ஆண்டனி அல்பனீஸ், தலைமையிலான தொழிலாளர் கட்சி வெற்றிபெற்றது!

ஆண்டனி அல்பனீஸ்

ஆஸ்திரேலியா புதிய பிரதமராக ஆண்டனி அல்பனீஸ் தேர்வு செய்யப்பட உள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 151 இடங்களுக்கான தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நடந்தது. ஆட்சி அமைக்க 76 இடங்கள் தேவை என்ற நிலையில், நேற்று மாலையிலேயே எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 72 இடங்களை கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தலைவரும், பிரதமருமான ஸ்காட் மோரீசன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply