இந்தியா – பங்களாதேஷ் இடையேயான மித்தாலி ரயில் சேவையை இரு நாட்டு ரயில்வே அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சிலிகுரி, இந்தோ-பங்களாதேஷ் ரயில் சேவை, “மிதாலி எக்ஸ்பிரஸ்”, இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுரி நிலையத்தில் இருந்து வங்காளதேசத்தில் உள்ள டாக்காவிற்கு இன்று முதல் தனது பயணத்தைத் தொடங்க உள்ளது.

இந்தியா – பங்களாதேஷ் இடையேயான மித்தாலி ரயில் சேவையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் பங்களாதேஷ் ரயில்வேத்துறை அமைச்சர் முகமத் நூருல் இஸ்லாம் சுஜ்ஜன் ஆகியோர் காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இது மூன்றாவது இந்திய-பங்களாதேஷ் ரெயில் சேவையாகும். இது நான்கு குளிரூட்டப்பட்ட கேபின் கோச்சுகள் மற்றும் நான்கு குளிரூட்டப்பட்ட நாற்காலி இருக்கையுடன் டீசல் இன்ஜின் மூலம் ரயில்சேவை நடைபெற உள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply