2028-ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி உச்சத்தை எட்டும் என ஒடிசா ஹாக்கி அணியின் இயக்குநர் டேவிட் ஜான் தெரிவித்துள்ளார்.
“தற்போது அணியில் உள்ள ஜுனியர் ஹாக்கி வீர்ர்கள், 2028-ம் ஆண்டுக்குள் 300 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருப்பார்கள். ஒவ்வொரு வீரருக்கும் அதிக அனுபவம் கிடைத்திருக்கும்” என்று டேவிட் ஜான் கூறினார். எந்தவொரு சூழலையும் சமாளிக்கும் பக்குவமும் பெற்றிருப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.
“இந்திய ஹாக்கி அணிக்கு இது மகிழ்ச்சியான நேரம். ஆனால், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஹாலந்து ஆகிய அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன” என்று டேவிட் ஜான் சுட்டிக்காட்டினார்.
2022 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஹாக்கி ஆண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. மகளிர் அணி 4-வது இடத்தைப் பிடித்தனர். இது இந்திய ஹாக்கி அணியின் உத்வேகத்தை காட்டுவதாக உள்ளது.
–எம்.பிரபாகரன்