திருச்சி – சென்னை பைபாஸ் சாலையில், திருச்சி பழைய பால் பண்ணை மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி ஒன்று, இன்று (04/07/2022) பிற்பகல் 3 :45 மணி அளவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில், தண்ணீர் லாரியின் முன்பகுதி முற்றிலுமாக சிதைந்து சேதம் அடைந்தது. இந்த விபத்தில் தண்ணீர லாரியின் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். முன்னால் சென்ற லாரிக்கு எந்த சேதமும் இல்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு உண்மையிலுமே விரைந்து வந்த திருச்சி மாநகர காவல் துறையினர், மின்னல் வேகத்தில் செயல்பட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். சாலையில் சிதறி கிடந்த கண்ணாடி துகள்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களின் உதவியுடன் கூட்டி பெருக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதில் என்ன பெரிய ஆச்சரியம் என்றால், ரோந்து பணி போலீசார் மற்றும் போக்குவரத்து மற்றும் சட்டம் -ஒழுங்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்பட, திருச்சி மாநகர காவல்துறையின் ஒரு பட்டாளமே ஒரே நேரத்தில் இங்கு வந்து மீட்பு மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர் என்பதுதான். இதற்காக இவர்களை பாராட்டலாம்.
விபத்துக்குள்ளான இந்த தண்ணீர் லாரி திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள “நவீன் ஏஜென்சி” என்ற தனியார் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து இன்று (04/07/2022) பிற்பகல் நேரத்தில் நடந்ததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய பாதிப்பு மற்றும் உயிர் இழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com