உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் அண்மையில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான உலக கிக்பாக்ஸிங் போட்டியில், சென்னையைச் சேர்ந்த மாணவ மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.16 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 400 பேர் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா சார்பில் 14 பேர் கலந்து கொண்டனர்.பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற சுப்ரஜா, ஆண்கள் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற வசீகரன் ஆகியோர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
–எம்.பிரபாகரன்