மத்திய அரசின் தொலை மருத்துவ சேவையான இ-சஞ்சீவனி திட்டத்தின் மூலம் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலை தூரப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் இந்த திட்டத்தின் மூலம் மருத்துவ ஆலோசனைகளை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.டிஜிட்டல் சுகாதார இயக்கத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த திட்டம் உள்ளது என்றும் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்
எம்.பிரபாகரன்