மின் கட்டண உயர்கவைக் கண்டித்து தமிழக பாஜக போராட்டம் நடத்த வேண்டுமென்றால், கர்நாடகா அல்லது, குஜராத்தில்தான் நடத்த வேண்டும்” என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை புளியந்தோப்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது: “பொதுமக்கள் அடித்தட்டு மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் ரூ.1130 வரை கட்ட வேண்டிய சூழலில் இருந்து, 501 யூனிட் பயன்படுத்தினால் கூட ரூ.656 கூடுதலாக செலுத்த வேண்டிய சூழல் இருந்தது. இதனால் இரண்டு மின் இணைப்புகள் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளபட்டன. இதையெல்லாம் மாற்றி ஒரே கட்டமாக கொண்டுவரப்பட்டு, அதற்கான கட்டண விகிதங்களில்தான் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறதே தவிர, கடந்த ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக சீரழிவு காரணமாகவும், மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
எஸ்.திவ்யா