மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் ஈரான் துணை அதிபர் முஹமது மொஹ்பரை சந்தித்து, இந்தோ-ஈரான் உறவுகளை வலுப்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழித்தடம் மற்றும் ஆயுஷ்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், ஈரான் துணை அதிபர் முஹமது மொஹ்பரை தெஹ்ரானில் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா, ஈரான் இடையே உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியாவுக்கான ஈரான் சிறப்புத் தூதரான ஈரான் துணை அதிபர், இந்தியா, ஈரான் உறவை மேலும் வலுப்படுத்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக, இந்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சரின் ஈரான் வருகைக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், சபஹர் துறைமுகத்தின் வணிகம், வளர்ச்சி, ஏற்றுமதியின் அளவு அதிகரிக்கும் என்றும் துணை அதிபர் கூறினார். பிராந்திய வளர்ச்சிக்கான துறைமுகமாக சபஹர் துறைமுகத்தை மாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில், இருநாடுகளும் இணைந்து ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஈரான் துணை அதிபரை சந்தித்தப் பிறகு பேசிய திரு.சர்பானந்த சோனோவால், “ஈரான் துணைஅதிபர் முஹமது மொஹ்பரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, ஈரானிடையே உறவுகளை வலுப்படுத்தும் வழிகள் குறித்து விவாதித்தோம். ஈரானுடனான இந்தியாவின் ஆற்றல் மிக்க உறவை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். இருநாடுகளிடையே, பரஸ்பரம் நன்மை பயக்கும் உறவுகளை மேலும் ஆழப்படுத்தவும், விரிவுப்படுத்தவும் மிக உயர்ந்த வழிகளை பற்றி தெரிவிக்குமாறு பிரதமர் என்னிடம் கேட்டு கொண்டார்” என்று அமைச்சர் சர்பானந்த சோனோவால் குறிப்பிட்டார்.

திவாஹர்

Leave a Reply