ஸ்மார்ட் இந்தியா ஹக்கத்தான் இறுதி போட்டிகள் சென்னை அருகே உள்ள சத்தியபாமா உயர்நிலை கல்லுரியில் இன்று காலை தொடங்கியது.மத்திய கல்வி அமைச்சகத்தின் புதிய கண்டுபிடிப்புகள் பிரிவின் ஒருங்கிணைப்புடன் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இப்போட்டியில் பங்கேற்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக திண்டுக்கல் காந்தி கிராம் நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.அரசு, அமைச்சகங்கள், அரசுத்துறைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் செயல்படுவதில் உள்ள சிரமங்களை ஆய்வு செய்து அதனை எளிமைப்படுத்துவதற்கான கண்டுபிடிப்புகளை வழங்கும் சிறந்த மாணவர் குழுவிற்கு இறுதி பரிசு வழங்கப்படும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வில், நவீன முறைகளில் தீர்வுகாண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.கல்லு}ரி மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த போட்டிகள் தற்போது பள்ளி மாணவர்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.
இன்று முதல் 29-ஆம் தேதிவரை, முதல்கட்ட இறுதிப்போட்டிகள் நடைபெறுகின்றன.75-வது விடுதலை பெருவிழாவின் ஒரு பகுதியாக 75 உயர் தொழில்நுட்ப கல்வி மையங்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டிகளை மத்திய கல்வி அமைச்சகத்தின் புதுமைப் படைத்தல் பிரிவு அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.
சத்தியபாமா அறிவியல் தொழில்நுட்ப கல்லுரியில்உள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான போட்டி நடைபெற்றது.புதுமை படைத்தல் பிரிவில் மூன்று பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இதில் வெற்றிபெறும் மாணவருக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
திவாஹர்