புதுதில்லியில் நாளை நடைபெற உள்ள டிஜிட்டல் கட்டமைப்பு வழங்குவோர் சங்கத்தின் வருடாந்தர நிகழ்வு 2022-ல் மத்திய தகவல் தொடர்பு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தலைமை விருந்தினராக கலந்துகொள்வார். தகவல் தொடர்புத்துறையின் இணை அமைச்சர் தேவு சிங் சவ்கான் கவுரவ விருந்தினராக கலந்துகொள்வார்.
இந்த ஆண்டுக்கான நிகழ்வுக்கு “5 ஜி மற்றும் அதற்கு பிறகான விரைவுசக்தியின் தொலைநோக்கு” என்பது மையப்பொருளாக இருக்கும். தொலை தகவல் தொடர்பு துறையைப் பொறுத்தவரை 2022-ஆம் ஆண்டின் மிகப் பெரிய நிகழ்வாக இது இருக்கும்.
நாட்டின் வளர்ச்சிக்கும் அனைவரின் வாழ்க்கைக்கும் 5ஜி-யின் தாக்கம் குறித்து தங்களின் கண்ணோட்டத்தை பகிர்ந்து கொள்ள தனியார் மற்றும் பொதுத்துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வு புதுதில்லியில் செப்டம்பர் 14 அன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும்.
எம்.பிரபாகரன்