திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கீழ அம்பிகாபுரம், இந்திரா தெரு பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் பல நாட்களாக திறந்தவெளியில் இருப்பதால், குழந்தைகள், நோயாளிகள், முதியோர்கள் எந்த நேரத்திலும் அதில் தவறி விழும் அபாயம் உள்ளது.
பல நாட்களாக கழிவுநீர் கால்வாய் திறந்தவெளியில் ஓடுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் கொசுக்கள் தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.
எனவே திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயரும், ஆணையரும் அப்பகுதியை நேரில் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
–கே. பி.சுகுமார்.
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com