ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை பெறுவதற்கு பரஸ்பர நம்பிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு முக்கியமானது!- அனுப்ரியா படேல் வலியுறுத்தல்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை பெறுவதற்கு பரஸ்பர நம்பிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு முக்கியமானது என வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திருமதி. அனுப்ரியா படேல் வலியுறுத்தியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிநாட்டுப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைச்சர்களின் 21-வது கூட்டத்தில் உரையாற்றிய அவர், அனைத்து ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் அனைத்து உறுப்பினர்களுக்கும் உள்ள பரஸ்பர மற்றும் சமநிலை ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டார். வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் சமமான மற்றும் சமச்சீரான வளர்ச்சிக்கு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையே பயன் தரும் ஒத்துழைப்பு அவசியம் என்று குறிப்பிட்டார்.

பொருளாதார மீட்சிக்கு புத்துயிர் அளிக்கும் கருவியாக வர்த்தகத்தை உருவாக்குவதன் மூலம், சமமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு கூட்டு முயற்சியின் முக்கியத்துவம் வேண்டும் என சுட்டிக்காட்டினார். நம்பிக்கையும், வெளிப்படைத் தன்மையும் உலகளாவிய வர்த்தகத்தின் நிலைத்தன்மையை தீர்மானிக்கிறது. மேலும் பல்வேறு வர்த்தக அமைப்புகளின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களையும் பாதுகாப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஏழை, எளிய மக்கள் கொவிட்-19 போன்ற எந்தவொரு தொற்றுநோயையும் எதிர்த்துப் போரிடவும், வாழ்க்கை, வாழ்வாதாரம், ஊட்டச்சத்து மிக்க உணவு ஆகியவற்றை பெறுவதற்கு, மலிவு விலையில் மருந்துகள், தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்டவை கிடைப்பதற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

திவாஹர்

Leave a Reply