கால்பந்தாட்ட வீராங்கனை , மாணவி பிரியா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் .
அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்ற பிரியாவிற்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே உயிரிழப்பிற்கு காரணம் என்று தெரியவருகிறது .
இளம் வயதில் கால்பந்து விளையாட்டில் சாதிக்க துடித்த அவரின் கனவு கனவாகவே போய்விட்டது .
வீராங்கனை மாணவி பிரியாவிற்கு அரசு மருத்துவர்களின் கவனக் குறைவால் அளிக்கப்பட்ட சிகிச்சையால் உயிரிழந்தது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது . இளம் வயதில் அவரை இழந்து அவரது குடும்பமும் , உறவினர்களும் மீளாத்துயரில் இருக்கின்றனர் .
அரசு மருத்துவனையில் நடைபெற்ற இந்த தவறான சிகிச்சை அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளில் ஏற்படாமல் இருக்க வேண்டும் , இது எல்லோருக்கும் எச்சரிக்கையாக அமைந்து இருக்கிறது .
தமிழக அரசும் , சுகாதாரத்துறையும் அரசு மருத்துவனைகளை தொடர்ந்து கண்காணித்து இதுபோன்ற தவறான சிகிச்சை நடைபெறாமல் இருக்க உறுதி செய்துகொள்ள வேண்டும் .
தவறான சிகிச்சை அளித்த சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . வளர்ந்து வரும் இளம் வீராங்கனை பிரியாவின் இழப்பு கால்பந்து விளையாட்டிற்கு பேரிழப்பாகும் .
பிரியாவின் இழப்பிற்கு அவர்களது குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் .
மாணவி பிரியா அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கும் , உற்றார் உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் .
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்