பங்களாதேஷ், மாலத்தீவுகள், ஐக்கிய அரபு அமீரகம், லாட்வியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதர்கள் இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில், வழங்கிய நியமனப் பத்திரங்களை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
நியமனப் பத்திரங்களை வழங்கியவர்கள் விவரம்:
- திரு முகமது முஸ்தாபிசுர் ரஹ்மான் – பங்களாதேஷ் மக்கள் குடியரசு தூதர்
- திரு இப்ராஹிம் ஷாஹீப் – மாலத்தீவுகள் குடியரசு தூதர்
- டாக்டர் அப்துல் நாசர் ஜமால் உசேன் முகமது அல்ஷாலி – ஐக்கிய அரபு அமீரகத் தூதர்
- திரு ஜூரிஸ் போன் – லாட்வியா குடியரசு தூதர்
- திரு சுசூகி ஹிரோஷி – ஜப்பான் தூதர்
எம்.பிரபாகரன்