சுகாதார ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் மைல்கல் திட்டமாக, நாக்பூரில் தேசிய ஒற்றை சுகாதார நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி,  2022 டிசம்பர் 11ம் தேதி தேசிய ஒற்றை சுகாதார நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுவதுடன்,  நாக்பூரில் ரத்தக் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் குறித்த மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தையும் தொடங்கி வைக்கிறார். 

இந்த நிறுவனங்கள், பாதிக்கப்படக்கூடிய மக்களின் விலைமதிப்பில்லா உயிரைக் காப்பாற்றும் பணியில் சிறப்பான சேவையாற்றும். 

நாக்பூரில் தேசிய ஒற்றை சுகாதார நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டி, சந்திராபூரில்  ஐசிஎம்ஆர்-ரின் ரத்தக் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் குறித்த மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் டாக்டர். பாரதி பிரவீன் பவர், அத்துறையின் செயலாளர் டாக்டர் ராஜீவ் பால் மற்றும் பலர் கலந்துகொள்கின்றனர். 

மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயானத் தொடர்பு மூலமாகப் பரவும்  தொற்று நோய்கள், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால்,  மனிதகுலத்தின் ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கிறது. மனிதர்களுக்குப் பரவும் நோய்களில் பாதிக்கும் மேற்பட்டவை, விலங்குகளாலேயேப் பரவுகிறது.  எனவே இந்த நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில், நாக்பூரில்   அமைய உள்ள தேசிய ஒற்றை சுகாதார நிறுவனம் முக்கியப் பங்காற்றும். மேலும் சுகாதாரத்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் மத்திய அரசின் மைல்கல் திட்டமாகவும் இது திகழும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply