இந்திய விளையாட்டு ஆணையத்தில் தற்போது 959 பயிற்சியாளர்கள் பணியில் உள்ளனர்!- அனுராக் தாக்கூர்.

இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் வெவ்வேறு விளையாட்டுப் பிரிவுகளின் பயிற்சியாளர்களை நியமிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பயிற்சி மற்றும் போட்டி ஒதுக்கீடுகளுக்கான ஆண்டில் வெளிநாட்டு பயிற்சியாளர்களை பணியில் அமர்த்த தேசிய விளையாட்டு கூட்டமைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு ஆணையத்தில் தற்போது 959 இந்திய பயிற்சியாளர்கள் உள்ளனர்.

இந்திய பயிற்சியாளர்களுக்கு 7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின்படி ஊதியம் வழங்கப்படுகிறது. வெளிநாட்டு பயிற்சியாளர்களுக்கு  அவர்களுடைய சந்தை மதிப்பு, தகுதி, அனுபவம் கடைசியாக பெற்ற ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் ஊதியம் அளிக்கப்படுகிறது.

இத்தகவலை மாநிலங்களவையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply