முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். திரு அடல் பிகாரி வாஜ்பாய் குறித்த தமது கருத்துக்களையும் திரு மோடி பகிர்ந்தார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது:
“அடல் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். இந்தியாவிற்கு அவர் அளித்த பங்களிப்பு மறக்க இயலாதது. அவரது தலைமைத்துவமும், தொலைநோக்குப் பார்வையும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளிக்கிறது.”
திவாஹர்