அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர், நாட்டின் தென்கோடி முனையான இந்திரா முனையை பார்வையிட்டார்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் திரு  ராஜ்நாத் சிங், இன்று நாட்டின் தென்கோடி முனையான இந்திரா முனைக்கு விஜயம் செய்தார். அவருடன் அந்தமான் மற்றும் நிக்கோபார் கமாண்டர்-இன்-சீஃப் லெப்டினன்ட் ஜெனரல் அஜய் சிங் சென்றிருந்தார்.  பாதுகாப்புத் தயார் நிலையை ஆய்வு செய்த அமைச்சர், பிராந்தியத்தில் தேசிய நலன்களைத் தொடர்ந்து பாதுகாக்க துருப்புக்களை  அறிவுறுத்தினார். 

இந்திரா முனை  கிரேட் கால்வாயில் உள்ளது. இது சர்வதேச போக்குவரத்திற்கான ஒரு முக்கிய கப்பல் பாதையாகும். ஆயுதப் படைகளின் வலுவான இருப்பு, பிராந்தியத்தில் நிகர பாதுகாப்பு வழங்குநராக இருக்கும் அதன் பொறுப்பை சிறப்பாகச் செய்வதற்கு இந்தியாவைத் தயார்படுத்துகிறது.

கார் நிக்கோபார் தீவு மற்றும் கேம்ப்பெல் விரிகுடாவுக்கு சென்ற அவர், அங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்தார். அங்குள்ள கூட்டுப் படைகளுடன் அவர் உரையாடினார், ஒப்பிடமுடியாத துணிச்சலுடனும், அர்ப்பணிப்புடனும் நாட்டிற்கு சேவை செய்ததற்காக அவர்களைப் பாராட்டினார். ஐஎன்எஸ் பாஸுக்கு சென்ற அவர், கடற்படையினருடன் கலந்துரையாடினார்.

ஜனவரி 2019க்குப் பிறகு இந்திரா முனைக்கு பாதுகாப்பு அமைச்சர் சென்றிருப்பது முதல் முறையாகும்.  இந்த தொலைதூர தீவுகள் இந்தோ-பசிபிக் பகுதிக்கு அருகில் இருப்பதால், அமைச்சரின் வருகை  துருப்புக்களுக்கு ஊக்கமளித்தது.

திவாஹர்

Leave a Reply