என்சிசி குடியரசு தின முகாமைக் குடியரசு துணைத்தலைவர் தொடங்கி வைத்தார்.

2023-ம் ஆண்டுக்கான என்சிசி குடியரசு தின முகாமைக் குடியரசு துணைத் தலைவர், திரு  ஜக்தீப் தன்கர், 7 ஜனவரி 2023 அன்று புது தில்லியில் முறைப்படி தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில், ராணுவம், கப்பற்படை,  விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளிலிருந்தும் எடுக்கப்பட்ட என்சிசி பயிற்சியாளர்கள் தொகுப்பு குடியரசு துணைத் தலைவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கியது. குடியரசு துணைத்தலைவரும்  அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

என்சிசி மாணவர்களிடையே  உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், இளம் மாணவர்களிடையே பண்பு, தோழமை மற்றும் தன்னலமற்ற சேவை உணர்வை வளர்ப்பதன் மூலம் தேசக் கட்டமைப்பில் என்சிசியின் பங்களிப்பைப் பாராட்டினார். என்சிசி, பல ஆண்டு காலமாக, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக பணியாற்றுகின்ற, உந்துதல் மற்றும் ஒழுக்கமுள்ள இளைஞர்களிடையே உண்மையான, துடிப்பான மற்றும் பன்முகத் தன்மைகொண்ட பணியாளர்களை உருவாக்கியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

உலகின் மிகப்பெரிய இளைஞர் அமைப்பான என்.சி.சிக்கு, குறிப்பாக அமிர்தகாலத்தின் கடமைப் பாதையில் நடைபோடும்  பயிற்சியாளர்களுக்கு எப்போதும் போற்றப்பட வேண்டிய தருணமாக இருக்கும் என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார்.

அண்மையில் புதுப்பிக்கப்பட்ட “ஹால் ஆஃப் ஃபேம்” எனும் புகழ்பெற்றோரை கெளரவிக்கும் காட்சிக்கூடம் மற்றும் பயிற்சிப் பகுதியை  திரு ஜக்தீப் தன்கர் பார்வியிட்டார். அங்கு  இளம் பயிற்சியாளர்கள் தங்கள்  மாநிலங்களைப் பற்றி அளித்த  விளக்கத்தை அவர் கேட்டறிந்தார்.  மேலும் பயிற்சிப் பகுதிகளில்  அவர்களால் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த  பல்வேறு சமூக கருப்பொருள்களைப் பார்வியிட்டு பாராட்டினார்.

குடியரசு துணைத் தலைவருக்கு என்சிசி முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர் பதவியை  என்சிசி தலைமை இயக்குனர்  லெப்டினன்ட் ஜெனரல் குர்பீர்பால் சிங் வழங்கினார்.

தேசிய மாணவர் படையின் (என்சிசி) 74வது குடியரசு தின முகாம், 2023 ஜனவரி 02, 2023 அன்று தில்லி கன்டோன்மென்ட் பகுதியில்  கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் தொடங்கியது. இந்த ஒரு மாதகால முகாமில்  28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களிலிருந்து 710 பெண்கள் உட்பட மொத்தம் 2,155 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக 19 நட்பு நாடுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளும் இந்த முகாமில் பங்கேற்பார்கள்.

முகாமில் கலந்துகொள்ளும் என்சிசி மாணவர்கள்  கலாச்சாரப் போட்டிகள், தேசிய ஒருங்கிணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பல்வேறு நிறுவனப் பயிற்சிப் போட்டிகள் போன்ற பல நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள். 26 ஜனவரி 2023 அன்று குடியரசு தின அணிவகுப்பில் இரண்டு என்சிசி அணிவகுப்பு குழுக்கள் பங்கேற்கும். எண்ணற்ற மற்றும் அதிக நேரத்தையும் பெருமுயற்சிகளையம்  கோரும் நடவடிக்கைகள் 2023,  ஜனவரி  28 அன்று மாலை பிரதமர் பங்கேற்கும் பேரணியுடன் நிறைவடையும்.

எம். பிரபாகரன்

Leave a Reply