குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு ஜக்தீப் தன்கர், 83-வது அகில இந்திய சட்டம் இயற்றும் அவைகளின் தலைவர்கள் மாநாட்டை, ஜெய்பூரில் 2023,11-ம் தேதி அன்று தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
கடந்த 2021-ஆம் ஆண்டில் நூற்றாண்டு கண்ட அகில இந்திய சட்டம் இயற்றும் அவைகளின் தலைவர்கள் மாநாடு என்பது இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களின் தலைவர்களின் உயர்நிலை அமைப்பாகும். 2021-ஆம் ஆண்டில் சிம்லாவில் நடைபெற்ற 82-வது அகில இந்திய சட்டம் இயற்றும் அவைகளின் தலைவர்கள் மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார். இந்த மாநாட்டின் முதல் கூட்டம் கடந்த 1921-ஆம் ஆண்டு சிம்லாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாடு ஜெய்ப்பூரில் நடைபெறுவது நான்காவது முறையாகும்.
நடைபெறவுள்ள 83-வது மாநாட்டில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள்:
- i. ஜனநாயகத்தின் தாய் என்ற நிலையில் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம்
- நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இயக்கங்களை சிறப்பான, ஆக்கப்பூர்வமான மற்றும் பொறுப்புமிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துதல்.
- மாநில சட்டமன்றங்களை டிஜிட்டல் முறையில் நாடாளுமன்றத்துடன் ஒருங்கிணைத்தல்
- இந்திய அரசியலமைப்பின் உணர்வுகளுக்கு ஏற்றவாறு சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையே சுமூமான உறவு நிலையை தொடரவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுதல்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக புத்தகக் கண்காட்சியும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மக்களவைத் தலைவர் ராஜஸ்தான் மாநில முதல்வர், மாநிலங்களவைத்துணை தலைவர் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள சட்டம் இயற்றும் அவைகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
எஸ்.சதிஸ் சர்மா