முல்லைத்தீவில் இந்து ஆலயத்தை இடித்துவிட்டு பௌத்த விகாரை கட்டுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு!

mullaiமுல்லைத்தீவு- கொக்கிளாய் முகத்துவாரம் கிராமத்தில் இந்து ஆலயம் அமைந்திருந்த இடத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வரும் சம்பவத்தை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

1984ம் ஆண்டு இப்பகுதியிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் குடியேறிய சிங்களவர்கள் இப்பகுதியில் பெரும்பான்மையினராக தற்போது மாறியிருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்காக விகாரைகள், பாடசாலை, தேவாலயம், மருத்துவமனை போன்றன தமிழர்களுடைய நிலங்களில் எவ்வித தயவு தாட்சண்யமுமின்றி அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதன் ஒரு பகுதியாக முகத்துவாரம் பகுதியிலுள்ள அரச மரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த இந்து ஆலயம் முற்றாக இடித்து அகற்றப்பட்டுள்ளது.

இதன் பின்னர் தற்போது அந்த இடத்தில் சிறிய விகாரை ஒன்றை அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் குறித்த ஏற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply