நிலக்கரி சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் நீர் 900 கிராமங்களில் உள்ள 18 லட்சம் மக்களுக்கு பயன்படுகிறது.

நிலக்கரி அமைச்சகம் வழிவகுத்தபடி, நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள், செயல்படும் சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் நீரையும் செயல்படாத சுரங்கத்திலிருக்கும் நீரையும், சுற்றிபுறத்திலுள்ள  900 கிராமங்களில் வாழும் 18 லட்சம் மக்களின் குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்ப சேமித்து வினியோகிக்கிறது.

தற்போதைய நிதியாண்டில் நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்கள் 4000 கிலோ லிட்டர் சுரங்க நீரை மக்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இதில் கடந்த டிசம்பர் 2022க்குள் 2788 கிலோ லிட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடிநீர் வசதி உள்பட பல்வேறு வீட்டு உபயோகத்திற்கு 881 கிலோ லிட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பழங்குடியினர் மற்றும் கிராமவாசிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.

அரசின் இத்தகைய நீர் சேமிப்பு முயற்சி ஜல் சக்தி அபியான் திட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமந்துள்ளது.

2022-23ம் நிதியாண்டில் நிலக்கரி இந்தியா நிறுவனம் (சி ஐ எல்) 1510 ஹெக்டர் நிலத்தை பசுமையாக்கும் நடவடிக்கையில் தனது ஆண்டு இலக்கை தாண்டி, 1600 ஹெக்டர் நிலத்தை பசுமையாக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த டிசம்பர் வரை நிலக்கரி இந்தியா நிறுவனம் 31 லட்சம் செடிகளை நட்டுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply