என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக பிரசன்ன குமார் மோத்துப்பள்ளி பொறுப்பேற்றுக் கொண்டார்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக திரு பிரசன்ன குமார் மோத்துப்பள்ளி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக, இவர்,  குஜராத் மாநில மின்சார கழக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தார். ஆந்திரப்பிரதேச மாநிலம் பாபட்லா பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார். இவர், மின்சார மற்றும் நிலக்கரித்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த அனுபவம் பெற்றவர். செயல் மேலாண்மை, சந்தை மேலாண்மை, நிதி மேலாண்மை, மனிதவள மேலாண்மை ஆகிய பிரிவுகளில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். மத்திய அரசின் எரிசக்தித் திறன் அமைப்பின் எரிசக்தித் தணிக்கையாளர் தேர்வில் முதலிடம் பெற்றார். பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். 

திவாஹர்

Leave a Reply