நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை.

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டதிருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த 2020ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ம் தேதி விசாரணைக்கு வந்தது.தமிழ்நாடு அரசின் வேட்புமனு மீதான விசாரணையை 4 வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீட் தொடர்பான வழக்கை நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருக்க விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த நிலையில், நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கு விசாரணைக்கு வரும் போது தமிழ்நாடு அரசின் சார்பாக எடுத்துரைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

எஸ்.திவ்யா

Leave a Reply