மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானை சிங்கப்பூரில் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகக் குழு, தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் திருமதி அமந்தா கிவெக் தலைமையில் இன்று சந்தித்தது. கல்வித்துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது, தொழில்நுட்பங்களை அனைவரும் அணுகும் வகையில் ஜனநாயகப்படுத்துவது, தொழில்முனைவு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
இந்த சந்திப்பின் போது பேசிய திரு தர்மேந்திர பிரதான், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் வலுவான ஒத்துழைப்புடன் இந்தியாவும், சிங்கப்பூரும் இயற்கையான நல்லுறவைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதை எதிர்நோக்கியிருப்பதாக அவர் கூறினார்.