கேவிஐசி முன்னெடுப்பு- கர்நாடகாவின் மலவள்ளி மாவட்டத்தில் 300 தேனிப் பெட்டிகளை தலைவர் விநியோகித்தார்.

காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத்தின் தலைவர் திரு மனோஜ் குமார், கர்நாடகாவில் 2023, ஜனவரி 18 முதல் 21 வரை நான்கு நாள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.  பயணத்தின் போது, தேனி வளர்ப்பு இயக்க திட்டத்தின் கீழ் 300 தேனிப் பெட்டிகளை அவர் விநியோகித்தார்.   பானை தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் மக்கள் திறனை மேம்படுத்துவதற்காக குயவர்களின் மின்சார சக்கர பயிற்சி திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.  மலவள்ளியில் நடைபெறும் இப்பயிற்சியில் சுமார் 40 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு மனோஜ் குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில்,  பல்வேறு திட்டங்கள், நிகழ்ச்சிகள் மூலம் இளைஞர்களுக்கு குறிப்பாக கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள பெண்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதில் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். பல்வேறு முயற்சிகள் மூலம் நாட்டில் கூடுதல் வேலைவாய்ப்பை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். சிறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்குவதன் மூலம் வேலை தேடுபவராக இல்லாமல் வேலை அளிப்பவராக இளைஞர்கள் உருவாகி நாட்டை தற்சார்புடையதாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுமாறு அவர் வலியுறுத்தியுனார்.

உற்பத்தி தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ், உற்பத்தி தொழில்பிரிவை தொடங்குவதற்காக வழங்கப்படும் நிதி ரூ. 25 லட்சம் என்பதிலிருந்து ரூ.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எம். பிரபாகரன்

Leave a Reply