ஓஎன்ஜிசியின் அடையாளமான சாகர் சாம்ராட் நடமாடும் அலகாக மீண்டும் நாட்டுக்கு அர்ப்பணிப்பு.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓஎன்ஜிசி) நிலத்தைக் குடைந்து தோண்டும் சாகர் சாம்ராட் ரிக் , ஒரு நடமாடும் அலகாக  நாட்டிற்கு மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது. இதனை அர்ப்பணித்துள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங்  பூரி, “சாகர் சாம்ராட்டின் மறு அர்ப்பணிப்பு , நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் இயற்கையின் கொந்தளிப்பான சக்திகளை எதிர்கொள்ளும் துணிச்சலுக்கும் விருப்பத்திற்கும் ஒரு சான்றாகும்” என்று கூறினார்.

1973 இல் கட்டப்பட்ட சாகர் சாம்ராட் ரிக் 14 முக்கிய கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிப்புகளில் முக்கிய பங்கு வகித்ததுடன், 125 கிணறுகளைத் தோண்டியது.

“இந்த அதிநவீன வசதி கொண்ட ரிக் தினசரி 20,000 பேரல் கச்சா எண்ணெயைக் கையாளும், அதிகபட்ச ஏற்றுமதி எரிவாயு திறன் ஒரு நாளைக்கு 2.36 மில்லியன் கன மீட்டர் மற்றும் இந்தியாவின் உற்பத்திக்கு தினசரி 6000 பில்லியன் பேரல் எண்ணெய் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்று அவர் கூறினார்.

“2047 ஆம் ஆண்டுக்குள் எரிசக்தி  தன்னிறைவை நோக்கிய இந்தியாவின் நிலையான பயணத்தில் ஒரு நேர்மறையான படி, இந்த அலகு ஆழமான நீரில் செயல்பட முடியும், முன்பு பயன்படுத்தப்படாத இருப்புக்களை அணுகுவதற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.” என அமைச்சர்  கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply