தமிழக அரசு, வருங்காலங்களில் மக்களின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு மதிப்பளித்து உரிய தேதி, நேரத்தில் எருதுவிடும் விழா நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலங்காலமாக பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக எருதுவிடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்ச்சி அப்பகுதி மக்களால் பாரம்பரியமா தொடர்ந்து நடத்தப்படுவது என்பது யாவரும் அறிந்ததே.

இந்த வருடம் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருதுவிடும் விழாவிற்கு அனுமதிகேட்டு அப்பகுதி மக்கள் விண்ணப்பித்து இருந்தனர். அரசிடம் இருந்து அதற்கான அனுமதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஏற்பட்ட அதற்கான பூர்வாங்க பணியில் அரசு அதிகாரிகளினால் ஏற்பட்ட காலதாமத்தால் மக்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாடுகளும் அத்துமீறல்களும் ஏற்பட்டு அதனால் சாலை மறியல், கல்வீச்சு, தடியடிய என்று விரும்பத்தகாத செயல்கள் அரங்கேறி இருக்கிறது. இச்செயல் மிகவும் வருந்ததக்கது.

மக்களின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காலகாலமாக நடைபெற்று வரும் எருதுவிடும் விழாவிற்கு அரசு உரிய
முன்னேற்பாட்டுடன் அனுமதி அளித்து இருக்க வேண்டும். மக்கள் தங்கள் உரிமைகளை பெற வன்முறையில் இறங்கும் அளவிற்கு அரசும், அதிகாரிகளும் காலதாமதம் செய்யக் கூடாது.

வருங்காலங்களில் இதுபோல் ஒரு அசம்பாவிதம் நடைபெறாதவாறு தமிழக அரசு மக்களின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து எருதுவிடும் நிகழ்ச்சி உரிய காலத்தில், உரிய நேரத்தில் பாதுகாப்பாக நடைபெற உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply