குடியரசுத் தலைவரை பூட்டான் நாடாளுமன்றக் குழுவினர் சந்திப்பு.

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை  பூட்டான் நாட்டு சபாநாயகர் மதிப்பிற்குரிய திரு வாங்சுக் நம்கியால் தலைமையிலான நாடாளுமன்றக் குழுவினர் இன்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தனர்.

அந்தக் குழுவினரை வரவேற்ற குடியரசுத் தலைவர், “இந்தியா மற்றும் பூட்டான் இடையேயான பன்முகத்தன்மை, தனித்துவமான நட்பிற்கு மதிப்பளிக்கிறோம். பூட்டான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் ஆர்வங்கள் பூர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசு அந்நாட்டுடனான இருதரப்பு ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்ய தீவிரம் காட்டி வருகிறது.  குறிப்பாக விண்வெளி ஒத்துழைப்பு, வேளாண்மையில் புதுமை, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை, ஸ்டார்ட் நிறுவனங்கள், புதுப்பிக்கத்தக் எரிசக்தி மற்றும் டிஜிட்டல் மேம்பாடு போன்ற துறைகளில் இரண்டு நாடுகளுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கைகளுக்கு புதிய பாதையில் இந்தியா பயணித்து வருகிறது.  இதன் விளைவாக பூட்டான் அரசின் அனைவருக்குமான வளம் என்ற இலக்கை அடைவதற்கு இந்தியா பக்கபலமாக உள்ளது என்றார்.

வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகள் பட்டியலில் இருந்து 2034-ம் ஆண்டுக்குள் முன்னேறும், அதிக வருவாய் ஈட்டும் பொருளாதார நாடுகளின் பட்டியலில் பூட்டான் பயணிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த வளர்ச்சிப் பாதையில் பயணம் மேற்கொள்ளும் பூட்டானுக்கு நேர்மையான, நம்பகரமான நட்பு நாடாக இந்தியா எப்போதும் இருக்கும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.  

திவாஹர்

Leave a Reply