பிப்ரவரி 24 ஆம் தேதி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்- இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் 61-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்- இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் 61-வது பட்டமளிப்பு விழா பிப்ரவரி 24, 2023 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ளது. குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், இணையமைச்சர்கள் திரு கைலாஷ் சவுத்ரி, திருமிகு சுஸ்ரீ ஷோபா கராந்த்லாஜே ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்பார்கள்.

ஐந்து நாட்கள் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிப்ரவரி 20-ஆம் தேதி ஆறு துறைகளைச் சேர்ந்த 26 பிரிவுகளின் எம்.எஸ்.சி மற்றும்  முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களின் விளக்கக்காட்சிகள் இடம்பெறும். பட்டங்கள் வழங்கப்படும் நாளன்று வங்கதேசம், எகிப்து, எத்தியோப்பியா, கானா, நைஜீரியா, ருவாண்டா, இலங்கை, டான்சானியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 400 பேர் பட்டங்களைப் பெறுவார்கள். இந்த நிகழ்ச்சியின் போது நபார்டு- பேராசிரியர் வி.எல் சோப்ரா தங்கப்பதக்கம் மற்றும் சிறந்த மாணவருக்கான விருதுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் வழங்குவார். இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் வலையொளி பக்கத்தில் இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்படும்.

திவாஹர்

Leave a Reply